மகாராஷ்டிரா:  பாஜக கூட்டணி 42 இடங்களில் முன்னிலை- நிதின் கட்கரி 3066 வாக்குகள் முன்னிலை- காங்கிரஸ் கூட்டணி தோல்வி முகம்

மகாராஷ்டிரா:  பாஜக கூட்டணி 42 இடங்களில் முன்னிலை- நிதின் கட்கரி 3066 வாக்குகள் முன்னிலை- காங்கிரஸ் கூட்டணி தோல்வி முகம்
Updated on
1 min read

மகாராஷ்டிர மாநில மக்களவைத் தேர்தல் முடிவுகளில் பாஜக கூட்டணி 42 இடங்களில் முன்னிலை வகிக்கிறது , காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் கட்சி 5 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. மொத்த இடங்கள் 48.

மகாராஷ்டிரா காங்கிரஸ் தலைவர் அசோக் சவான் 2876 வாக்குகள் பின் தங்கியுள்ளார், முன்னாள் மத்திய அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டே சோலாப்பூரில் 4627 வாக்குகள் பின்னடைவு கண்டுள்ளார்.

ஷரத் பவாரின் உறவினரான பார்த் பவார் மாவல் தொகுதியில் 43,979 வாக்குகள் பின்னிலை காண, தேசியவாத காங்கிரஸ் தலைவரின் மகள் சுப்ரியா சூலே பாரமதியில் 6486 வாக்குகள் முன்னிலையில் இருக்கிறார்.

மத்திய அமைச்சர் ஹன்ஸ்ராஜ் ஆஹிர் சந்த்ரபூர் தொகுதியில் 49 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கிறார், ஆனால் மத்திய அமைர்ச்சர் ஆனந்த் கிடே 1064 வாக்குகள் வித்தியாசத்தில் பின்னடைவு கண்டுள்ளார்.

மும்பை காங்கிரஸ் தலைவர் மிலிந்த் தியோரா மும்பை சவுத் தொகுதியில் 15,904 வாக்குகள் பின்னிலை கண்டுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in