பாகிஸ்தான் ராணுவம் இந்திய நிலைகள் மீது சரமாரித் தாக்குதல்

பாகிஸ்தான் ராணுவம் இந்திய நிலைகள் மீது சரமாரித் தாக்குதல்
Updated on
1 min read

இந்திய நிலைகள் மற்றும் எல்லையோர கிராமங்கள் மீது பாகிஸ்தான் ராணுவம் நடத்திய சரமாரியான துப்பாக்கிச் சூடு மற்றும் வெடிகுண்டுத் தாக்குதலில் ராணுவத் தளவாடங்கள் சிதைந்ததாக பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து பாதுகாப்புத்துறையின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்ததாவது:

''பூஞ்ச் மாவட்டத்தின் கிருஷ்ணா செக்டரிலும் ராஜவ்ரி மாவட்டத்தின் கேரி செக்டரிலும் இன்று காலையிலிருந்து பாகிஸ்தான் ராணுவம் தங்களது சிறிய ஆயுதங்களைக் கொண்டு குண்டுமழையைப் பொழிந்தது.

இதனால் எல்லையோர கிராமங்கள் மற்றும் இந்திய நிலைகள் தாக்குதலுக்கு ஆளாகின. இதில் இந்திய ராணுவத்தின் சிறிய ரக பீரங்கிகள் உள்ளிட்ட தளவாடங்கள் சிதைக்கப்பட்டன. இச்சம்பவத்தின்போது உயிர்ச்சேதம் ஏற்பட்டதற்கான தகவல்கள் ஏதும் தற்போது வரை இல்லை.

கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக தொடர்ந்து ராணுவம் அத்துமீறித் தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு இந்திய ராணுவமும் அவ்வப்போது தகுந்த பதிலடிகளைக் கொடுத்து வருகிறது.

கடந்த வியாழனிலிருந்து கிட்டத்தட்ட இருநூறு மணிநேர இடைவெளியில் பூஞ்ச் மாவட்டத்தின் ஷாஹ்பூர் மற்றும் கர்ணி செக்டர்களை இலக்கு வைத்து பாகிஸ்தான் நடத்திய தாக்குதல் கஸ்பா செக்டரில் நடத்திய தாக்குதலோடு முடிவுக்கு வந்தது. இந்நிலையில் அதே மாவட்டத்தில் இந்தச் சம்பவம் இன்று நடந்தது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in