Last Updated : 05 May, 2019 05:31 PM

 

Published : 05 May 2019 05:31 PM
Last Updated : 05 May 2019 05:31 PM

சிறையிலிருந்து 850 இந்தியர்கள் விடுவிப்பு; எனது கோரிக்கையை சவுதி ஏற்றது: மோடி பெருமிதம்

என்னுடைய கோரிக்கையை ஏற்று சவுதி சிறையில் அடைக்கப்பட்டிருந்த 850 இந்தியர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்தார்.

உத்தரப் பிரதேசத்தில் பிரதமர் நரேந்திர மோடி பாஜக வேட்பாளர்களை ஆதரித்து மக்களவைத் தேர்தலுக்கான பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். பாடோஹி மாவட்டத்தில் இன்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் கலந்துகொண்டு பேசியதாவது:

''சவுதி அரேபிய இளவரசர் இந்தியாவுக்கு வந்திருந்தபோது சவுதி சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள இந்தியக் கைதிகளை ரம்ஜானுக்கு முன்னதாக விடுதலை செய்யும்படி அவரிடம் நான்  கோரிக்கை வைததிருந்தேன். எனது கோரிக்கையை ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

ஜெய்ஷ்-இ-முகம்மது (ஜெ.எம்.எம்) தலைவர் மசூத் அஸார் சர்வதேசப் பயங்கரவாதி என்று ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் அறிவித்தது உலக நாடுகள் மத்தியில் இந்தியா வளர்ந்து வருவதையே இது காட்டுகிறது.

நம் நாட்டிலே நான்கு வகையான கட்சிகளைப் பார்க்க முடிகிறது. இவை நான்கு வகையான ஆட்சி மற்றும் அரசியல் கலாச்சாரங்களைக் கொண்டுள்ளது. அதில் ஒன்று நாம்பந்தி (வாரிசு அரசியல்), இரண்டாவது வாம்பந்தி. மூன்றாவது டாமன் மற்றும் டாம்பந்தி. நான்காவதாக உள்ளதுதான் நாம் பின்பற்றும் விகாஸ்பந்தி.

சமாஜ்வாதி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சிகள் இரண்டும் பணம் சம்பாதிப்பதற்காகவே அதிகாரத்தைப் பயன்படுத்திக்கொள்பவர்கள்.

இத்தகைய சக்திகள் அதிகாரத்திற்கு வந்தால் ஆம்புலன்ஸில் ஊழல் செய்வது, தேசிய ஊரக மருத்துவக் குழுக்களில் ஊழல்கள் செய்வது போன்றவற்றைக் காணலாம். ஆனால், நாங்கள் ஆட்சி அதிகாரத்திற்கு வந்தால் அதை மக்களுக்காகப் பயன்படுத்துவோம். ஏழையிலும் ஏழையாக உள்ளவர்களுக்கு ஆயூஷ்மேன் பாரத் போன்ற திட்டங்களை நடைமுறைப்படுத்துவோம்.

சிலரிடம் அதிகாரம் வந்தபோது அவர்கள் தேசத்தையே தங்களுக்காக வைத்திருந்தார்கள். ஆனால் நமது கட்சி அதிகாரத்திற்கு வந்தால் வளர்ச்சியை முன்னெடுப்போம்''

இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x