Published : 16 May 2019 11:06 AM
Last Updated : 16 May 2019 11:06 AM

ஆங்கில அகராதியில் புதிய வார்த்தை Modilie: ராகுல் கிண்டல்

பிரச்சார மேடைகளில் பிரதமர் மோடியை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி விதவிதமாக விமர்சித்து வருகிறார். அந்த வரிசையில் அண்மையில் அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவிட்டார்.

அதில், ஆங்கில அகராதியில் ஒரு புதிய வார்த்தை இடம்பெற்றுள்ளது. அதன் ஸ்க்ரீன்ஷாட்டை இணைத்துள்ளேன் எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

அதன்படியே ஃபோட்டோஷாப் செய்யப்பட்ட படம் ஒன்றை பதிவேற்றியுள்ளார். அது கிட்டத்தட்ட ஆக்ஸ்ஃபோர்டு ஆங்கில அகராதியின் ஆன்லைன் பதிப்பு போல் உருவாக்கப்பட்டிருக்கிறது. ஆக்ஸ்ஃபோர்டு இலச்சினை மட்டுமே இடம்பெறவில்லை. அதில் 'Modilie' என்ற வார்த்தை இடம்பெற்றிருந்தது.

அதற்கு அர்த்தம் 'எப்போதுமே உண்மையை திரிப்பது' எனப் பதிவிடப்பட்டிருந்தது. அதேபோல் 'Modiliar', 'Modifying' ஆகிய வார்த்தைகளும் அந்த ஸ்க்ரீன்ஷாட்டில் இடம்பெற்றிருந்தன. 

'Modifying' என்றால் 'இடைவிடாது பொய் உரைப்பவர்; பொய் சொல்வதையே வழக்கமாகக் கொண்டவர்' என்றும். 'Modiliar' என்றால் 'ஓய்வின்றி பொய் உரைப்பவர்' என்றும் அர்த்தம் கற்பிக்கப்பட்டிருந்தது.

பிரதமர் மோடி பொய் உரைப்பதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகிறார். அதுவும் குறிப்பாக ரஃபேல் பேரத்தில் மோடி பொய் உரைப்பதாகக் கூறி வருகிறார். அதுமட்டுமல்லாது வளர்ச்சித் திட்டங்களுக்கான வாக்குறுதிகள் எல்லாம் நிறைவேற்றப்படாமல் போலி வாக்குறுதிகளாக இருப்பதாகவும் கூறி வருகிறார்.

அவர் கலந்து கொள்ளும் எல்லா பிரச்சாரக் கூட்டங்களிலும் மோடியை 'பொய்யர்' என்று விமர்சித்து வருகிறார். இந்நிலையில், ஆங்கில அகராதியிலேயே இப்படி ஒரு வார்த்தை இடம்பெற்றிருப்பது போல் ஜோடித்து தனது வாதத்துக்கு சுவாரஸ்யம் சேர்த்துள்ளார் ராகுல்.

ஏற்கெனவே, அருண் ஜேட்லியை ஆங்கிலத்தில் எழுதும்போது Arun Jaitlie என்றே எழுதி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x