Last Updated : 17 May, 2019 01:37 PM

 

Published : 17 May 2019 01:37 PM
Last Updated : 17 May 2019 01:37 PM

இல்லை, நான் அப்படிச் சொல்லவில்லை: யு-டர்ன் அடித்த குலாம் நபி ஆசாத்

காங்கிரஸ் கட்சி பிரதமர் பதவியை கோராது என்று கூறவில்லை, மத்தியில் நிலையான ஆட்சி அமைய காங்கிரஸ் கட்சிக்கு வாய்ப்பு அவசியம் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் திடீரென மாற்றிப் பேசியுள்ளார்.

மக்களவைத் தேர்தலுக்குப் பின், மீண்டும் பாஜக தலைமையிலான ஆட்சி அமைவதை தடுக்க காங்கிரஸ் கட்சி தீவிரமாக காய்களை நகர்த்த வருகிறது. மாநிலக் கட்சிகளுக்கு வளைந்து கொடுக்கும் வகையில் பல்வேறு முடிவுகளையும் காங்கிரஸ் கட்சி எடுக்க தயாராகி வருகிறது.

 இதுதொடர்பாக சிம்லாவில் நேற்று பேசிய காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத், " தனிப்பெரும் கட்சியாக காங்கிரஸ் கட்சி வந்தால்கூட,  மாநில கட்சிகளில் இருந்து ஒரு தலைவர் பிரதமராக வர விரும்பினால்கூட அதை காங்கிரஸ் கட்சி ஆதரிக்கும். க

ாங்கிரஸ் கட்சிக்கு பிரதமர் பதவி வழங்கப்படாவிட்டால்கூட அதை ஒரு பிரச்சினையாக மாற்ற மாட்டோம். மத்தியில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வரக்கூடாது " எனத் தெரிவித்திருந்தார். இதனால், மாநிலக் கட்சித் தலைவர்களில் ஒருவர் பிரதமராக வாய்ப்பு இருக்கலாம் எனும் கருத்து எழுந்தது. ஆனால், அதை 24 மணிநேரத்துக்குள் மாற்றிப்பேசி பல்டி அடித்துள்ளார் குலாம்நபி ஆசாத்.

இந்நிலையில், இன்று காலை ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு குலாம் நபி ஆசாத் பேட்டி அளித்தார். அப்போது, அவர் கூறுகையில், " காங்கிரஸ் கட்சி பிரதமர் பதவியை கோராது என்பதில் உண்மையில்லை. நாட்டிலேயே மிகப்பழமையான, பெரிய கட்சி காங்கிரஸ் கட்சி.

5 ஆண்டுகள் ஆட்சி செய்யக்கூடிய கட்சி என்பதால், மிகப்பெரிய அரசியல்கட்சிக்கு வாய்ப்பு வழங்க வேண்டும். இன்னும்  தேர்தல் முடிவுகள் வராதநிலையில், கூட்டணியில் இதுகுறித்து சண்டையிட்டுக்கொள்ளக் கூடாது. பிரதமர் பதவி கருத்தொற்றுமை அடிப்படையில் முடிவு செய்யப்படும்.

தேர்தலுக்கு பின் காங்கிரஸ் கட்சி மிகப்பெரிய கட்சியாக உருவெடுக்கும். 273 இடங்கள்வரை காங்கிரஸ் கைப்பற்றும். கடந்த காலங்களிலும் வென்றிருக்கிறோம், இனிமேலும் வெல்வோம் எனும் நம்பிக்கை இருக்கிறது.அதேசமயம், ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸ் அரசு அமைந்து நாட்டில் 5 ஆண்டுகள் நிலையான ஆட்சி தரும்.

நாட்டின் பிரதமராக வருவதற்கு ராகுல் காந்திக்கு தகுதிகள் இருக்கின்றன. மன்மோகன் சிங், வாஜ்பாய் ஆகியோர் 5 ஆண்டுகள் ஆட்சியை நிறைவு செய்ததற்கு காரணம், எம்.பி.க்கள் அதிகமாக இருந்தனர். ஆதலால், நிலையான அரசு தருவதற்கு காங்கிரஸ் கட்சிதான் தேர்வு " எனத் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x