Last Updated : 31 May, 2019 09:36 AM

 

Published : 31 May 2019 09:36 AM
Last Updated : 31 May 2019 09:36 AM

பிரதமர் மோடியின் அமைச்சரவையில் அமித் ஷா, ராஜ்நாத் சிங், ஜெய்சங்கருக்கு எந்தெந்த பொறுப்புகள்?

பிரதமர் மோடியின் அமைச்சரவையில் 57 அமைச்சர்கள் பதவி ஏற்றுள்ளநிலையில் அதில் முக்கிய பொறுப்புகள் யார் யாருக்கு வழங்கப்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

17-வது மக்களவை தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 353 இடங்களை கைப்பற்றி மகத்தான வெற்றி பெற்று 2-வது முறையாக ஆட்சி அமைத்துள்ளது.

குடியரசு தலைவர் மாளிகையில் நேற்று நடந்த பதவி ஏற்பு விழாவில் மோடிக்கு, குடியரசுத் தலைவர்  ராம்நாத் கோவிந்த் பிரதமராக பதவிப் பிரமாணமும், ரகசியக் காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். இதன்மூலம் அவர் தொடர்ந்து 2-வது முறையாக பிரதமர் ஆனார்.

அவரை தொடர்ந்து பிற அமைச்சர்கள் பதவியேற்று வருகிறார்கள். பாரதிய ஜனதாவைச் சேர்ந்தவர்களுடன் சிவசேனா உள்ளிட்ட கூட்டணி கட்சிகளைச் சேர்ந்தவர்களும் மத்திய அமைச்சர்களாகப் பதவி ஏற்றனர்.

மொத்தம் மோடியின் அமைச்சரவையில் 57 அமைச்சர்கள் பதவி ஏற்றனர். புதிதாக அமைந்த அமைச்சரவையில் மூன்றில் ஒரு பங்கு அமைச்சர்கள் புதியவர்கள் . அமித் ஷா, முன்னாள் ஐஎப்எஸ் அதிகாரி ஜெய்சங்கர் ஆகியோர் முதல்முறையாக அமைச்சர்களாகப் பதவி ஏற்றனர்.

பிரதமர் மோடியின் அமைச்சரவையில் 24 பேர் கேபினெட் அமைச்சர்களாகவும், 9 பேர் தனிப்பொறுப்புடன் கூடிய இணையமைச்சர்களாகவும், 24 பேர் இணையமைச்சர்களாவும் நேற்று பொறுப்பேற்றனர்.

ஆனால், யார் யாருக்கு எந்தெந்த துறைகள் வழங்கப்பட உள்ளன என்பது குறித்த தகவல் ஏதும் நேற்று தெரிவிக்கப்படவில்லை. முக்கியத் துறைகள் யாருக்கு வழங்கப்படலாம் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

பிரதமர் மோடி: பணியாளர் துறை, ஓய்வூதியம் மற்றும் பொதுமக்கள் குறைகேட்பு, அணுசக்தி துறை, விண்வெளி மற்றும் இதர துறைகள்

ராஜ்நாத் சிங்: மத்திய உள்துறை

அமித் ஷா: நிதி மற்றும் கார்ப்பரேட் விவகாரம்

நிதின் கட்காரி: சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலை, கப்பல்துறை, நீர்வளம், நீர்மேம்பாடு, கங்கை நிதியை புதுப்பித்தல்

டி.வி.சதானந்த கவுடா: புள்ளியியல் துறை மற்றும் திட்ட நடைமுறை

நிர்மலா சீதாராமன்: பாதுகாப்புத் துறை

எஸ். ஜெய்சங்கர்: வெளியுறவுத்துறை

ரவிசங்கர் பிரசாத்: சட்டம் மற்றும் நீதி, மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம்

ரமேஷ் போக்ரியல்: சுகாதாரம் மற்றும் குடும்ப நலம்

ஸ்மிருதி இரானி: மகளிர் மற்றும் குழந்தை மேம்பாடு

நரேந்திர சிங் தோமர்: நாடாளுமன்ற விவகாரம், ஊரக மேம்பாடு மற்றும் பஞ்சாயத்துராஜ்

தாவர் சந்த் கெலாட்: சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x