Published : 10 May 2019 08:17 PM
Last Updated : 10 May 2019 08:17 PM

வான்வெளி மீறல்: கராச்சியிலிருந்து வந்த விமானம் இடையீடு செய்யப்பட்டு ஜெய்பூரில் தரையிறக்கம்

இன்று கராச்சியிலிருந்து புறப்பட்ட ஆன் - 12 என்ற ஜார்ஜிய போக்குவரத்து விமானம் தன் பாதையிலிருந்து விலகி இந்திய வான்வெளிக்குள் வந்ததையடுத்து இந்திய விமானப்படை விழிப்புடன் அதனை இடைமறித்து ஜெய்பூர் விமானதளத்தில் தரையிறக்கப்பட்டது.

 

இது தொடர்பாக இந்திய விமானப்படை செய்தித் தொடர்பாளர் செய்திக்குறிப்பில் குறிப்பிடும் போது, “அந்த விமானம் வெற்றிகரமாக இடையீடு செய்யப்பட்டு ஜெய்பூர் ஏர்பீல்டில் தரையிறக்கப்பணிக்கப்பட்டது” என்று கூறியுள்ளது.

 

இது குறித்து ஏ.என்.ஐ. செய்தி நிறுவனம் இது தொடர்பான வட்டாரங்களை மேற்கோள் காட்டி, வெளியிட்ட செய்தியில் முக்கிய விமானதளமான கட்சின் ரானுக்கு 70 கிமீ சுற்றுப்பரப்புக்குள் இந்திய வான்வெளியில் மதியம் 3.15 மணியளவில் இந்த சரக்கு விமானம் நுழைந்தது. இந்த விமான தளம் பயணிகள் விமானப்பகுதி அல்ல.

 

“இந்த விமானம் அதிகாரபூர்வ விமானப் போக்குவரத்துச் சேவை வழியை அனுசரிக்காமல் இந்திய கட்டுப்பாட்டு முகமைகளின் ரேடியோ அழைப்புகளுக்கும் பதில் அளிக்காமல் இருந்தது. அதுவும் அனுமதிக்க முடியாத ஒரு இடத்திலிருந்து இந்த விமானம் இந்திய வான்வெளிக்குள் நுழைந்தது. இதனையடுத்து எச்சரிக்கையுடன் இருந்த இந்திய விமானப்படை இந்த விமானத்தை இடையீடு செய்து ஜெய்பூர் ஏர்ஃபீல்டில் இறக்கப் பணிக்கப்பட்டது.” என்று அரசு தரப்பு அறிக்கை ஒன்றில் தெரிக்கப்பட்டுள்ளது.

 

இந்த விமானத்தை சுகாய் சூ-30 போர் விமானங்கள் 27,000 அடியில் பறந்த கொண்டிருந்த போது வெற்றிகரமாக இடையீடு செய்தது.  அப்போது இந்த விமானம் ஜார்ஜியாவின் பிலிசியிலிருந்து கராச்சி வழியாக டெல்லி நோக்கி வந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து இது இடையீடு செய்யப்பட்டு ஜெய்பூர் ஏர்பீல்டில் விசாரணைக்காக தரையிறக்கப் பணிக்கப்பட்டது.

 

அந்த விமானத்தின் பைலட்கள், ஊழியர்கள் விசாரிக்கப்பட்டனர்.  இது தொடர்பாக மேலும் விவரங்கள் வெளியாகும் என்று எதிர்பாக்கப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x