திருமணமான இரண்டே மாதங்களில் மணப்பெண்ணுக்கு வரதட்சணைக் கொடுமை: வைரலான வீடியோ

திருமணமான இரண்டே மாதங்களில் மணப்பெண்ணுக்கு வரதட்சணைக் கொடுமை: வைரலான வீடியோ
Updated on
1 min read

திருமணமான இரண்டே மாதங்களில் மணப்பெண்ணிடம் வரதட்சணை கேட்டு மணமகன் வீட்டார் அடித்துத் துன்புறுத்திய வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.

ஹரியாணா மாநிலம் ஃபரிதாபாத்தைச் சேர்ந்த பெண்ணை அவரது கணவர் குடும்பத்தார் சரமாரியாக தாக்கும் காட்சி வைரலானதையடுத்து போலீஸார் வழக்கை தாமாகவே முன்வந்து கையிலெடுத்துள்ளனர்.

இது குறித்து பாதிக்கப்பட்ட பெண் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், "என்னை எனது கணவரும், மாமனார் மாமியாரும் அடித்தனர். என்னிடம் அவர்கள் வரதட்சனை கேட்கின்றனர். மோட்டார் சைக்கிளும் எதிர்பார்க்கின்றனர். எங்களது திருமணம் காதல் திருமணம்.

ஆனால், காதல் கணவரே இப்போது என்னை அடித்துத் துன்புறுத்துகிறார். அவர்கள் கேட்கும் வரதட்சனையைக் கொடுக்காவிட்டால் நான் விவாகரத்து தர வேண்டும் என்கின்றனர்" என்று கூறினார்.

ஃபரிதாபாத் போலீஸ் கமிஷனர் விக்ரம் கபூர், இது கணவன், மனைவி பிரச்சினையென்றாலும் சம்பந்தப்பட்ட பெண் தாக்கப்பட்டிருக்கிறார். அதனாஅல் நாங்கள் விசாரித்து வருகிறோம் என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in