

நோயாளிகளுக்கான ஆலோசனை கட்டணத்தைக் குறைத்து கொள்ள வேண்டும் என்று ராஷ்டிரிய ஜனதா தள (ஆர்ஜேடி) எம்பி பப்பு யாதவ், பிஹார் மாநில மருத்துவர்களுக்கு கட்டளையிட்டுள்ளார். இதை அமல்படுத்துமாறு முதல்வர் ஜிதன்ராம் மாஞ்சியையும் வலியுறுத்தி உள்ளார்.
இதுகுறித்து ராஜேஷ் ரஞ்சன் யாதவ் என்ற பப்பு யாதவ் செய்தி யாளர்களிடம் கூறியதாவது:
அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் மருத்துவர்களில் 90 சதவிகிதத்துக்கும் அதிகமானவர் கள் மருத்துவமனைகளுக்குச் சென்று சரிவர தங்கள் கடமையைச் செய்வதில்லை. மாறாக அரசிடம் சம்பளம் வாங்கிக்கொண்டு, தனி யார் மருத்துவமனைகளை நடத்தி வருகின்றனர்.
இவ்வாறு தனியாக மருத்துவம் பார்க்கும் மருத்துவர்கள் நோயாளி களிடம் மிக அதிக அளவில் கட்டணம் வசூலிக்கின்றனர். குறிப்பாக, சாதாரண நோயாளிகளுக்குக்கூட, மோசமான நிலை எனக் கூறி ‘வெண்டிலேட்டர்’ பொருத்துவது, ஓர் அறுவை சிகிச்சை செய்துவிட்டு இரண்டு எனக் கூறுவது உள்ளிட்ட மோசடி செயலிலும் சில மருத்து வர்கள் ஈடுபடுகின்றனர். இதனால் ஏழைகள் கடுமையாக பாதிக்கப் படுகிறார்கள்.
எனவே, மருத்துவர்களுக்கான ஆலோசனை கட்டணத்தை குறைத் துக் கொள்ளுமாறு எனது தொகுதி மருத்துவர்களுக்கு கட்டளையிட் டுள்ளேன். இதுபோல் மாநிலம் முழுவதும் மருத்துவர்களின் ஆலோசனை கட்டணத்தைக் குறைத்து ஒரே மாதிரியாக நிர்ண யிக்க முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதை அமல்படுத்த வில்லை எனில் மாநில அரசுக்கு எதிராக போராட்டம் நடத்த திட்ட மிட்டுள்ளேன் என பப்பு யாதவ் தெரிவித்தார்.
பப்பு யாதவின் அறிவிப்பின்படி, எம்.பி.பி.எஸ். பயின்ற மருத்துவர் களுக்கு ரூ.150, எம்.டி.க்கு ரூ.200, சிறப்பு மற்றும் அனுபவமிக்க மருத்துவர்களுக்கு ரூ.300 எனக் கட்டணம் நிர்ணயிக்கப்பட் டுள்ளது. கட்டண ரசீதையும் நோயாளிகளுக்கு அளிக்க வேண் டும் எனவும் அவர் மருத்துவர் களுக்கு உத்தரவிட்டுள்ளார். இவரது இந்த அறிவிப்புக்கு பிஹார் மாநில மருத்துவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து, இந்திய மருத்துவர் கள் சங்கத்தின் பிஹார் மாநில செயலாளர் டாக்டர்.ஐ.பி.சிங் வெளி யிட்ட அறிக்கையில், “ஜனநாயக நாட்டில் எவரும் தங்கள் விருப் பத்தை மற்றவர்கள் மீது திணிக்க முடியாது. மருத்துவர்கள் மீது யாரும் அதிகாரத்தை செலுத்த முடியாது” என்றார்.
பிஹாரின் கிரிமினல் அரசியல் வாதிகளின் பட்டியலில் இருக்கும் பப்பு யாதவ், மாதேபுறா தொகுதி யின் ஆர்ஜேடி எம்பியாக இருக் கிறார். கொலை வழக்கு ஒன்றில் சிக்கி பல ஆண்டுகளாக சிறையில் இருந்தவர், மக்களவைத் தேர்த லுக்கு முன்பாக உச்ச நீதிமன்றத்தால் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
இவர் மீது மேலும் பல கிரிமினல் வழக்குகள் நடைபெற்று வருகின்றன. பல்வேறு கிரிமினல் செயல்களில் தொடர்புடைய இவருக்கு பயந்து கொண்டு இவரது கட்டளையை ஏற்று அனைத்து துறையினரும் செயல்படுவது அங்கு வழக்கமாக உள்ளது.
ஏற்கெனவே, லாலுவுக்கு நெருக்கமானவரும் ஆர்ஜேடி முன்னாள் எம்பியுமானவரும் பல்வேறு கிரிமினல் வழக்குகளில் சிக்கி சிறையில் இருப்பவருமான சையது சகாபுதீனும் பல ஆண்டுகளுக்கு முன்பு தனது தொகுதி மருத்துவர்களுக்கு இதுபோன்ற கட்டளையிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.