

அந்தமான் நிகோபர் தீவுகளில் இன்று அதிகாலை 4.1 ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இத்தகவலை இந்திய வானிலை ஆய்வு மையம் உறுதிப்படுத்தி உள்ளது.
அதிகாலை 2.04 மணிக்கு உணரப்பட்ட நிலநடுக்கம், 10 கிலோ மீட்டர் சுற்றளவுக்கு ஏற்பட்டது. இதனால் ஏற்பட்ட சேத, காய விவரங்கள் இதுவரை வெளியாகவில்லை.அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படும் பகுதிகளில் அந்தமான் நிகோபர் தீவுகளும் ஒன்றாகும்.
இங்கு கடந்த ஏப்ரல் 1-ம் தேதி மட்டுமே மொத்தத்தில் 20 முறை நிலநடுக்கம் ஏற்பட்டது. மிதமான நில அதிர்வுகள் என்றபோதிலும் அந்தமான் பகுதி பாதிக்கப்பட்டது.
இம்முறை சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை என்பதால், அங்கு பதற்ற சூழல் இல்லை. எனினும் சம்பந்தப்பட்ட பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டு உள்ளன.