

ஜனநாயக வல்லரசாக இந்தியா வளர்ந்து வருகிறது என்று ஆஸ்திரேலியப் பிரதமர் டோனி அபோட் புகழாரம் சூட்டியுள்ளார்.
நரேந்திர மோடி பிரதமராகப் பதவியேற்ற பிறகு முதன்முறை யாக இந்தியா வந்துள்ள அபோட் மேலும் கூறியதாவது:
"இந்த நாடுதான் கடந்த சில ஆண்டுகளாகத் தனது வளர்ச்சி யாலும், மேம்பாட்டின் மூலமும் உலகத்தை அதிசயிக்க வைத் திருக்கிறது. மக்கள்தொகையில் உலகில் இரண்டாவது பெரிய நாடு, வாங்கும் திறனில் உலகில் 3வது பெரிய பொருளாதாரம் என அதன் சாதனைகள் அதிகம்.
இந்தப் பரந்த உலகில் இந்தியா வின் முக்கியத்துவத்தையும், ஆஸ்திரேலியாவின் எதிர்காலத் துக்கு இந்தியாவின் முக்கியத்து வத்தையும் அங்கீகரிக் கவே நான் இந்தப் பயணத்தை மேற்கொண்டிருக்கிறேன்.
33 ஆண்டுகளுக்கு முன்னால் நான் இந்தியாவைப் பார்த்த போது, அணுமின் நிலையத்துக் குள் ஒரு மாட்டு வண்டியில் எரிபொருட்கள் கொண்டு சென்ற தைப் பார்த்தேன். இப்போது மாட்டு வண்டிகள் இல்லை. அணுமின் நிலையங்கள் அசா தாரணமான வளர்ச்சியைக் கண்டிருக்கின்றன.
இந்தியாவில் வாய்ப்புகள் நிறைய இருக்கின்றன. அதை முழுவதுமாகப் பயன்படுத்திக் கொள்ள ஆஸ்திரேலியா விரும்பு கிறது" என்றார்.