

இந்திய எல்லையில் கடந்த சில நாட்களாக சீனப் படையினர் ஊடுருவியுள்ள நிலையில், இன்று இருநாட்டு ராணுவ உயர் அதிகாரிகளும் கொடி அமர்வு கூட்டத்தில் கலந்து கொண்டு முக்கிய ஆலோசனை நடத்துகின்றனர்.
காஷ்மீரின் சுமார் பகுதியில் சீனப் படையினர் குவிந்துள்ளனர். அவர்களை திருப்பி அனுப்பது தொடர்பாக இந்திய ராணுவ உயர் அதிகாரிகள் சீன அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தவுள்ளனர்.
இந்த கொடி அமர்வுக் கூட்டம், லடாக்கின் சுன்சூல் பகுதியில் நடைபெறுகிறது.