வளர்த்துக்கொள்வதில் செலவிடுங்கள்: எதிர்க்கட்சியினருக்கு சேத்தன் பகத் வேண்டுகோள்

வளர்த்துக்கொள்வதில் செலவிடுங்கள்: எதிர்க்கட்சியினருக்கு சேத்தன் பகத் வேண்டுகோள்
Updated on
1 min read

வளர்த்துக்கொள்வதில் செலவிடுங்கள் என்று எதிர்க்கட்சியினருக்கு சேத்தன் பகத் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி பெரும்பான்மை பலத்துடன் மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் என்று தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் (எக்ஸிட் போல்ஸ்) தெரிவிக்கின்றன.

இந்த முடிவுகளால் பாஜக கட்சியினர் பெரும் உற்சாகத்தில் இருக்கிறார்கள். இந்த கருத்துக் கணிப்புகள் முடிவுகளைத் தொடர்ந்து எதிர்க்கட்சிப் பிரதிநிதிகள் ஒன்றிணைந்து தேர்தல் ஆணையரை சந்தித்து பேசியுள்ளனர்.

இந்நிலையில், தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் குறித்து பிரபல எழுத்தாளர் சேத்தன் பகத் தனது ட்விட்டர் பதிவில், ''23-ம் தேதி வரும் தேர்தல் முடிவுகள், கருத்துக் கணிப்புகள் சொல்வதைப் போல மோடிக்கு சாதகமாக இருந்தால், எதிர்க்கட்சிக்கு ஒரே ஒரு வேண்டுகோள். தயவு செய்து, அடுத்த ஐந்து வருடங்களை, மோடியை வெறுக்க அல்லாமல் உங்களை வளர்த்துக்கொள்வதில் செலவிடுங்கள்'' என்று தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in