ஜார்க்கண்டில் நக்சல்கள் தாக்குதல்: பாதுகாப்பு அதிகாரிகள் 11 பேர் படுகாயம்

ஜார்க்கண்டில் நக்சல்கள் தாக்குதல்: பாதுகாப்பு அதிகாரிகள் 11 பேர் படுகாயம்
Updated on
1 min read

ஜார்க்கண்டில் நக்சல்கள் குண்டு வெடிக்கவைத்து நடத்திய வெடிகுண்டு  தாக்குதலில் 11 பாதுகாப்பு அதிகாரிகள் படுகாயம் அடைந்தனர்.

ஜார்க்கண்டின் செரைகேலா கார்சவான் மாவட்டத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை இந்த சம்பவம் நடந்துள்ளது.

செரைகேலா மாவட்டத்தின் குச்சாய் பகுதியில் சிஆர்பிஎப் வீரர்கள், கோப்ரா படையினர் மற்றும் மாநிலக் காவல்துறையினர் இணைந்து நக்சல்களைத் தேடும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அதிகாலை சுமார் 5 மணி அளவில், நக்சல்கள் வைத்திருந்த குண்டு பெரும் சத்தத்துடன் வெடித்தது. இதில் கோப்ரா படையினர் 8 பேரும் மாநில காவல்துறையினர் 3 பேரும் பலத்த காயமடைந்தனர்.

அவர்கள் அனைவரும் ராஞ்சியில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். சம்பவ இடத்தில் பாதுகாப்புப் படையினர் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஜார்க்கண்ட் மாநிலத்தில் நக்சல்களுக்கு எதிரான தேடுதல் வேட்டையில் சிஆர்பிஏப்பும் 299-வது கோப்ரா பட்டாலியனும் இணைந்து குழுவாகப் பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in