Last Updated : 23 May, 2019 06:36 PM

 

Published : 23 May 2019 06:36 PM
Last Updated : 23 May 2019 06:36 PM

விதிவிலக்குகளுடன் கட்சித் தாவிகளைக் காவு வாங்கிய 2019 மக்களவைத் தேர்தல் முடிவுகள்: சுவாரஸ்யமான முரண்கள்

கட்சித்தாவிகளுக்கு இந்தத் தேர்தல் முடிவுகள் பேரடியைக் கொடுத்துள்ளது. 58 கட்சித்தாவிகளில் 13 வேட்பாளர்கள் மட்டுமே தங்களது தொகுதிகளில் முன்னிலையில் உள்ளனர்.

 

இதில் வேடிக்கை முரண் என்னவெனில் பிறகட்சிகளிலிருந்து பாஜகவுக்கு மாறியவர்களுக்கு கட்சித்தாவல் வெற்றிகு இடையூறாக இருக்கவில்லை, ஒன்றிரண்டு பேரைத் தவிர.

 

லோக்சபா தேர்தல்களுக்கு முன்பாக பாஜகவிலிருந்து விலகி காங்கிரஸில் சேர்ந்த கடும் பாஜக விமர்சகரான சத்ருகன் சின்ஹா பிஹார், பாட்னா சாஹிப் தொகுதியில் மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்தைக் காட்டிலும் சுமார் 1.50 லட்சம் வாக்குகளுக்கும் அதிகமான வாக்குகளில் பின் தங்கியுள்ளார்.

 

அதே போல் தேர்தலுக்கு முன்பாக ஐக்கிய ஜனதாதளத்திலிருந்து ராஷ்ட்ரிய ஜனதாதளத்துக்குத் தாவிய ஷரத் யாதவ் சுமார் 1.30 லட்சம் வாக்குகள் ஜேடியு வேட்பாளர் சந்த்ர யாதவைக்க் காட்டிலும் பின் தங்கியுள்ளார்.

 

ஷரத் பவாரின் தேசியவாதக் காங்கிரஸிலிருந்து காங்கிரஸ் கட்சிக்கு மாறிய தாரிக் அன்வர் கதிஹார் தொகுதியில் சுமார் 40,000 வாக்குகள் பின் தங்கியுள்ளார்.

 

பாஜகவிலிருந்து காங்கிரஸுக்கு மாறிய முன்னாள் கிரிக்கெட் வீரரும் 1983 உலகக்கோப்பையை வென்ற அணியில் இருந்தவருமான கீர்த்தி ஆசாத் தன்பாத் தொகுதியில் சுமார் 1.6 லட்சம் வாக்குகள் பின் தங்கியுள்ளார்.

 

முன்னாள் மத்திய அமைச்சர் ஜஸ்வந்த் சிங்கின் மகன் மன்வேந்திரா காங்கிரஸ் டிக்கெட்டில் போட்டியிட்டு பார்மர் தொகுதியில் சுமார் 3.12 லட்சம் வாக்குகள் பின் தங்கி விட்டார்.

ஆனால் மாறாக போஜ்பூரி நடிகர் ரவி கிஷன் ஷுக்லா, இவர் கடந்த தேர்ஹ்டலில் காங்கிரஸில் போட்டியிட்டார், ஆனால் 2019க்கு முன்பாக பாஜகவில் இணைந்து தற்போது கோரக்பூர் தொகுதியில் 2.80 லட்சம் வாக்குகள் முன்னிலை பெற்றுள்ளார்.

 

கர்நாடகாவில் காங்கிரஸிலிருந்து பாஜகவுக்குத் தாவிய 3 தலைவர்களில் 2 பேர் குல்பர்கா, பெல்லாரி தொகுதிகளில் முன்னிலை வகிக்க, பாஜக ஹசன் தொகுதி வேட்பாளர் ஏ.மஞ்சு, தேவேகவுடா பேரன் பிரஜ்வால் ரெவன்னாவிடம் 1.42 லட்சம் வாக்குகள் பின் தங்கியுள்ளார்.

 

அதே போல் காங்கிரஸ் மூத்த தலவிஅர் ராதாகிருஷ்ண விகே பாட்டீல் காங்கிரஸிலிருந்து பாஜகவுக்கு மாறினார், இவர் அகமதுநகர் தொகுதியில் சுமார் 2.30 லட்சம் வாக்குகளில் முன்னிலை வகிக்கிறார்.

 

சிவசேனாவிலிருந்து விலகி காங்கிரஸில் சேர்ந்த சுரேஷ் தனோர்கர் பாஜக வேட்பாளரைக் காட்டிலும் அதிக வாக்குகளில் முன்னிலை வகிக்கிறார்.

 

நாந்தெதில் சிவசேனாவிலிருந்து பாஜகவுக்குத் தாவிய பிரதாப் சிக்லிகர் காங்கிரஸ் வேட்பாளர் அசோக் சவானைக் காட்டிலும் 37,000 வாக்குகள் அதிகம் பெற்றுள்ளார்.

 

பிஜு ஜனதாதளத்திலிருந்து பாஜகவுக்கு மாறிய பைஜந்த் பாண்டா சுமார் 40,000 வாக்குகள் பின்னிலை அடைந்துள்ளார்.

 

முன்னாள் மத்திய அமைச்சர் பனபாக லஷ்மி காங்கிரசிலிருந்து தெலுங்கு தேசத்துக்குத் தாவினார், தற்போஹ்டு 1.5 லட்சம் வாக்குகள் பின் தங்கியுள்ளார்.

 

மேலும் கட்சித்தாவிய முக்கியஸ்தர்களான ஆம் ஆத்மியின் தரம்வீர காந்தி, காங்கிரஸ் வேட்பாளர்கள் நசீமுதீன் சித்திகி, சாவித்ரி பாய் புலே, பாபு காத்ரா ஆகியோர் பின் தங்கியுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x