Published : 23 May 2019 02:20 PM
Last Updated : 23 May 2019 02:20 PM

காங்கிரஸுக்கு இந்த முறையும் எதிர்க்கட்சி அந்தஸ்து இல்லை?

காங்கிரஸுக்கு இந்த முறையும் பதவி கிடைக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக ஏப்ரல் 11-ம் தேதி முதல் மே 19-ம் தேதி வரை நடந்தது. 542  தொகுதிகளில் 273 இடங்களில் பாஜகவும் காங்கிரஸும் நேருக்கு நேர் போட்டியிட்டன.  7,928 வேட்பாளர்கள் நாடு முழுவதும் போட்டியிட்டனர். இதில்  724 பெண்கள் போட்டியிட்டனர்.

பாஜக 437 வேட்பாளர்களையும், காங்கிரஸ் கட்சி 421 வேட்பாளர்களையும்  களமிறக்கியது. இந்திய வரலாற்றிலேயே காங்கிரஸ் கட்சியைக் காட்டிலும் அதிகமான வேட்பாளர்களை பாஜக நிறுத்தியது.

இன்று காலை வாக்கு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்து பல்வேறு மாநிலங்களில் பாஜக முன்னிலை பெற்று வருகிறது. பிரதமர் மோடி, அமித் ஷா தலைமையில் மக்களவைத் தேர்தலைச் சந்தித்த பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி, மாபெரும் வெற்றியை நோக்கி நகர்ந்து மீண்டும் 2-வது முறையாக மத்தியில் ஆட்சியைப் பிடிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

பாஜகவைப் பொறுத்தவரையில் தனிப்பட்ட முறையில் 298 இடங்களில் முன்னிலை பெற்று வருகிறது. காங்கிரஸ் 51 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. பிரதான எதிர்க்கட்சி என்ற அந்தஸ்து பெற வேண்டும் என்றால் 55 தொகுதிகளில் ஒரு கட்சி வென்றிருக்க வேண்டும்.

கடந்த 2014-ம் ஆண்டு தேர்தலில் 44 இடங்களில் மட்டுமே காங்கிரஸ் வென்றதால், பிரதான எதிர்க்கட்சி தலைவர் பதவி கிடைக்கவில்லை. எனினும், வாக்கு எண்ணிக்கை முடிவுகள் முழுமையாக முடிந்த பின்னர்தான் உறுதியாகத் தெரியவரும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x