

வங்கக் கடலில் உருவாகியுள்ள ஃபானி புயல் இன்று ஒடிசா மாநிலத்தில் கரை யைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படு கிறது. இதையடுத்து, தாழ்வான பகுதிகளில் வசிக்கும் சுமார் 11.5 லட்சம் பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
தென்கிழக்கு வங்கக் கடலில் கடந்த சில தினங்களுக்கு முன்பு உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி, தாழ்வு மண்டலமாக மாறியது. பின்னர் அது அதிதீவிர புயலாக உருவெடுத்தது. ஃபானி என பெயரிடப்பட்ட அந்த புயல் தமிழகத்தின் வடகடலோர பகுதியில் கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அது திசை மாறி ஒடிசா மாநிலத்தை நோக்கி நகர்ந்து வருகிறது.
இதுகுறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் நேற்று மதியம் வெளியிட்ட அறிக்கையில், “வங்கக் கடலில் சுமார் 43 ஆண்டுகளுக்குப் பிறகு ஏப்ரல் மாதத்தில் அதிதீவிர புயல் உருவாகியிருக்கிறது. ஃபானி புயல் ஒடிசா மாநிலம் புரி நகருக்கு தெற்கே 320 கி.மீ. தொலைவில் மையம் கொண் டுள்ளது. இது மணிக்கு 16 கி.மீ. வேகத்தில் ஒடிசா கடற்கரையை நோக்கி நகர்ந்து வருகிறது. இதன்படி, புரி நகருக்கு அருகே உள்ள கோபால்பூர் பகுதியில் வெள்ளிக்கிழமை காலை 8 முதல் 10 மணிக்குள் கரையைக் கடக் கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அப் போது மணிக்கு 170 முதல் 180 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்” என கூறப்பட்டுள்ளது.
இந்தப் புயல் காரணமாக 13 மாவட் டங்களில் பலத்த காற்றுடன் அதிகன மழையும் பெய்யும் என எதிர்பார்க்கப் படுகிறது. இதையடுத்து, ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் உயர் அதி காரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது புயலை எதிர்கொள்ள தேவையான நடவடிக்கைகளை மேற் கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். மேலும் போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதால், பீதி அடைய வேண்டாம் என பொதுமக் களுக்கு முதல்வர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுகுறித்து புயல் நிவாரண நட வடிக்கைகளுக்கான சிறப்பு ஆணையர் விஷ்ணுபாத சேதி கூறும்போது, “உயி ரிழப்பைத் தடுப்பதற்கு முக்கியத்துவம் கொடுக்குமாறு முதல்வர் உத்தர விட்டுள்ளார்.
இதையடுத்து, கடற்கரையோர கிராமங்களில் தாழ்வான பகுதிகளில் வசித்து வரும் சுமார் 11.5 லட்சம் பேரை பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம். இவர் களை தங்க வைப்பதற்காக சுமார் 900 தற்காலிக முகாம்கள் அமைக்கப் பட்டுள்ளன” என்றார்.
மாநில தலைமைச் செயலாளர் ஏ.பி.பதி கூறும்போது, “புயல் காரணமாக அனைத்து மருத்துவர்கள் மற்றும் சுகாதாரத் துறை அதிகாரிகளின் விடுப்பு வரும் 15-ம் தேதி வரை ரத்து செய்யப் பட்டுள்ளது” என்றார்.
மாநில காவல் துறை தலைவர் கூறும் போது, “அனைத்து போலீஸாரின் விடுப்பும் ரத்து செய்யப்பட்டுள்ளது. விடுப்பில் உள்ள அனைவரும் உடனடியாக பணிக்கு திரும்புமாறு உத்தரவிடப்பட்டுள்ளது” என்றார்.
ரயில், விமான சேவைகள் ரத்து
ஒடிசா மற்றும் மேற்குவங்க கடல் பகுதி கொந்தளிப்புடன் காணப்படுவ தால், மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடப் பட்டுள்ளது. மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொள்வதற்காக, விமானப்படை, இந்திய கடற்படை, கடலோர காவல் படை, தேசிய பேரிடர் மீட்புப் படை, ஒடிஷா பேரிடர் அதிரடிப் படையினர் உள்ளிட்டோர் தயார் நிலையில் உள்ளனர்.
புயல் காரணமாக விசாகப்பட்டினம்-புரி மார்க்கமாக செல்லும் சுமார் 103 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக கிழக்கு கடலோர ரயில்வே தெரிவித்துள் ளது. இதுதவிர மேலும் பல ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
நள்ளிரவு முதல் புவனேஸ்வர் விமான நிலையம் மூடப்பட்டுள்ளது. இதனால் விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதுபோல, எச்சரிக்கையுடன் செயல்படுமாறு கடற்கரையோர விமான நிலையங் களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக விமான போக்குவரத்துத் துறை அமைச் சர் சுரேஷ் பிரபு தெரிவித்துள்ளார்.
வங்கக் கடலில் எண்ணெய் துரப் பண பணியில் ஈடுபட்டிருந்த சுமார் 500 ஓஎன்ஜிசி ஊழியர்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர்.
ஒடிசாவின் பாரதீப், ஆந்திராவின் விசாகப்பட்டினம் துறைமுகங்கள் மூடப்பட்டுள்ளன.
இந்தப் புயல் கரையைக் கடந்ததும் மேற்குவங்கத்தை நோக்கி செல்லும் என்பதால் அங்கும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இதனால் அங்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இதுபோல கடலோர ஆந்திராவிலும் தகுந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து உயர் அதிகாரிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை
ஃபானி புயலை எதிர்கொள்வதற்கான முன் னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுப்பது தொடர்பாக, பிரதமர் நரேந்திர மோடி தலைமை யில் டெல்லியில் நேற்று உயர்நிலை ஆலோ சனை கூட்டம் நடைபெற்றது. இதில், அமைச் சரவை செயலாளர், பிரதமரின் முதன்மை செயலாளர், கூடுதல் முதன்மை செயலாளர், உள்துறை செயலாளர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பங்கேற்றனர். அப்போது, புயல் நிலவரம் மற்றும் அதை எதிர்கொள்வதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து பிரதமரிடம் அதிகாரிகள் எடுத்துரைத் தனர். பின்னர், புயல் பாதிக்க வாய்ப்புள்ள மாநில அரசு அதிகாரிகளுடன் அவ்வப்போது தொடர்புகொண்டு நிலைமையை உன்னிப் பாக கண்காணிக்குமாறு அதிகாரிகளுக்கு பிரதமர் மோடி உத்தரவிட்டார்.
கடந்த 20 ஆண்டுகளில் ஒடிசாவை தாக்கும் 2-வது மிகப்பெரிய புயலாக இது இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 1999-ம் ஆண்டு அக்டோபர் மாதம் ஒடிசாவை பயங்கர புயல் தாக்கியது இதில் சுமார் 10 ஆயிரம் பேர் உயிரிழந்தனர். இதற்கு அடுத்தபடியாக ஃபானி புயலின் பாதிப்பும் அதிக அளவில் இருக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.