Last Updated : 28 Sep, 2014 10:48 AM

 

Published : 28 Sep 2014 10:48 AM
Last Updated : 28 Sep 2014 10:48 AM

சென்னை முதல் சிறைச்சாலை வரை..: தலையில் அடித்து அழுத அமைச்சர்கள்

வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட வி.என்.சுதாகரன் வெள்ளிக் கிழமை மாலையே பெங் களூர் வந்து விட்டார்.

ஜெயலலிதா, சசிகலா, இளவரசி ஆகிய 3 பேரும் நேற்று காலை சென்னையில் இருந்து தனி விமானத்தில் புறப்பட்டு 9.40 மணிக்கு பெங்களூர் பழைய விமான நிலையம் வந்து சேர்ந்தனர். அவர்களை அதிமுக அமைச்சர்களும், நிர்வாகிகளும் வரவேற்றனர். மைசூர் சாமுண்டீஸ்வரி கோயில் உள்ளிட்ட கோயில்களில் இருந்து கொண்டு வரப்பட்ட பிரசாதம் வழங்கப்பட்டது.

அதன்பிறகு அங்கிருந்து காரில் சுமார் 30 கி.மீ. பயணம் செய்து பரப்பன அக்ரஹாரா மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு நீதிமன்ற வளாகத்துக்கு சரியாக காலை 10.42 மணிக்கு வந்து சேர்ந்தனர். ஜெயலலிதா சென்ற காரைத் தொடர்ந்து 35 கார்கள் அணிவகுத்து வந்தன. 10 நிமிடங்கள் எல்லோரும் கார்களிலேயே அமர்ந்திருந்தனர்.

பின்னர் 10.55 மணிக்கு ஜெயலலிதா உள்ளிட்ட 3 பேரும் நீதிமன்ற அறையில் நுழைந்தனர்.

சென்னையில் இருந்து கொண்டு வரப்பட்ட நாற்காலியில் ஜெயலலிதா அமர அனுமதிக்க வேண்டும் என்று அவர் தரப்பு வழக்கறிஞர்கள் விடுத்த கோரிக்கையை நீதிபதி நிராகரித் தார்.

இதையடுத்து குற்றவாளி கூண்டில் போடப்பட்டிருந்த 4 நாற்காலிகளில் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி மற்றும் வி.என்.சுதாகரன் ஆகியோர் அமர்ந்தனர்.

குற்றம்சாட்டப்பட்டவர்கள் சார்பில் தலா ஒரு வழக்கறிஞரும், திமுக சார்பில் இரு வழக்கறிஞர்களும், அரசுத் தரப்பு வழக்கறிஞர் பவானி சிங், அவரது உதவியாளர் முருகேஷ் எஸ்.மரடி மற்றும் நீதிமன்ற ஊழியர்கள் உட்பட மொத்தம் 23 பேர் மட்டும் நீதிமன்ற அறையினுள் அனுமதிக்கப்பட்டனர்.

குறுகலான அந்த அறையில் 2 மின் விசிறிகள் மட்டும் இருந்ததால் ஜெயலலிதா உள்ளிட்ட அனைவரும் புழுக்கத்தால் வியர்த்து தவித்தனர். நீதிபதி தீர்ப்பை அறிவித்த பிறகு நீதிமன்றத்தில் பரபரப்பு தொற்றிக் கொண்டது. நீதிபதி உத்தரவின் பேரில் பாதுகாப்பை காவல் துறையினர் மேலும் பலப்படுத்தினர்.

அப்போது சுமார் அரை மணி நேரம் தனது வழக்கறிஞர் பி.குமாருடன் ஆலோசனை நடத்திய ஜெயலலிதா, பின்னர் நீதிமன்ற வளாகத்தைவிட்டு வெளியே வந்து தனது காரில் தனிமையில் அமர்ந்திருந்தார். பின்னர், ஓ.பன்னீர்செல்வத்தை அழைத்து அவருடன் 5 நிமிடங்கள் ஆலோசனை நடத்தினார்.

மீண்டும் நீதிமன்ற அறைக்குச் சென்ற ஜெயலலிதா, குற்றவாளி கூண்டில் அமர்ந்தார்.

ஜெயலலிதா சென்ற பிறகு ஓ.பன்னீர்செல்வம் உட்பட அனைத்து அமைச்சர்களும் தலையில் அடித்துக் கொண்டு கதறி அழுதனர். நீதிமன்ற வளாகத்தில் செல்போன் செயலிழக்கும் கருவி பொருத்தப்பட்டிருந்ததால் யாருடனும் தொடர்பு கொள்ள முடியவில்லை.

சென்னை மேயர் சைதை துரைசாமி, அமைச்சர் நத்தம் விசுவநாதன் ஆகியோர் சுமார் ஒரு கி.மீ. தூரம் நடந்து சென்று செல்போனில் பேசினர்.

தீர்ப்பு பற்றிய தகவல் தெரிந்தவுடன் பெங்களூர் நகரில் குவிந்திருந்த அதிமுக தொண்டர்கள் கலவரத்தில் ஈடுபட முயன்றனர். திமுகவினருக்கு எதிராக அதிமுகவினர் முழக் கங்களை எழுப்பினர். பெங்களூர் எலக்ட்ரானிக் சாலை சந்திப்பில் கலவரத்தில் ஈடுபட முயன்ற அதிமுகவினரை போலீஸார் தடியடி நடத்தி விரட்டினர்.

உணவு இடைவேளையின் போது ஜெயலலிதா ஒரு காரிலும், சசிகலா, இளவரசி வேறொரு காரிலும், சுதாகரன் இன்னொரு காரிலும் அமர்ந்து உணவு அருந் தினர். சுமார் 15 நிமிடம் ஓய்வெடுத்த ஜெயலலிதா, நத்தம் விசுவநாதனை அழைத்து 3 நிமிடங்கள் பேசினார். பின்னர் மீண்டும் அவர் நீதிமன்ற அறைக்குள் சென்றார்.

பெங்களூர் சிறைச்சாலையில் ஜெயலலிதா உட்பட 4 பேருக்கும் ஒதுக்கப்பட்டுள்ள கைதி எண்கள் விவரம்:

ஜெயலலிதா 7402

சசிகலா 7403

சுதாகரன் 7404

இளவரசி 7405

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x