தேர்தல் முடிவுகள் 2019: ஜம்மு-காஷ்மீர் நிலவரம்

தேர்தல் முடிவுகள் 2019: ஜம்மு-காஷ்மீர் நிலவரம்
Updated on
1 min read

மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கைகள் நடைபெற்று வருகின்றன. மொத்தமாக பாஜக 310 இடங்களில் முன்னிலை பெற்று அபார வெற்றியை நோக்கி நடைபோட்டுக் கொண்டிருக்கிறது.

ஜம்மு-காஷ்மீரில் தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் பரூக் அப்துல்லா, பிடிபி கட்சி வேட்பாளர் ஆகா சையத் மோசினைக் காட்டிலும் சிறு இடைவெளியான 80 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கிறார்.

பாஜக தலைவர் ஜிதேந்திரா சிங், காங்கிரஸ் வேட்பாளர் விக்ரமாதித்யா சிங்கைக் காட்டிலும் சுமார் 4,000 வாக்குகள் முன்னிலை பெற்றுள்ளார்.

முன்னாள் எம்.எல்.ஏ.யும், சர்ச்சைக்குரிய காஷ்மீரி அரசியல்வாதியுமான ஷெய்க் அப்துல் ரஷீத், பாரமுல்லா தொகுதியில் ஆச்சரியமான வகையில் 600 வாக்குகள் முன்னணியில் சென்று கொண்டிருக்கிறார்.

லடாக்கில் பாஜக வேட்பாளர் ஜய்யங் செரிங் நம்ஜியால், சுயேச்சை வேட்பாளர் சஜத் ஹுசைனைக் காட்டிலும் சுமார் 464 வாக்குகள் பின்னடைவு கண்டுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in