Published : 12 Sep 2014 17:12 pm

Updated : 12 Sep 2014 17:12 pm

 

Published : 12 Sep 2014 05:12 PM
Last Updated : 12 Sep 2014 05:12 PM

இவன் வேற மாதிரி

எல்லாத்தையும் நம்மால நேரடியா சொல்ல முடியாது. சொல்லாத மாதிரி சொல்வோம். அது புரியாத மாதிரி புரியும். இருக்கு ஆனா இல்ல ரகம்தான். பக்கத்துல உள்ள ஆளைப் பத்தி ஏதாவது பேசுணும்னா அமெரிக்காவுல உள்ள ஆளப் பத்தி பேசுற மாதிரி பாவ்லா பண்ணிட்டு, சும்மா டஜன் கணக்கா என்ன என்னமோ அவுத்துவிடுவோம்.

பக்கத்துல இருக்குற நம்மாளு அதுக்கு ஜால்ராகூட அடிப்பார். ஆனால் அவராலே தன்னப் பத்திதான் கதை போகுதுன்னு கண்டே பிடிக்க முடியாது. இதுக்கெல்லாம் அவார்டு ஏதாவது கொடுத்தா உலகத்துல வேற எந்த நாடும் நம்மை ஜெயிக்கவே முடியாது. நம்மாளுக இதுல பயங்கர ஸ்ட்ராங்க். பில்டிங் மட்டுமில்லங்க; பேஸ்மெண்டும்தான்.

அஞ்சான்: இவனுக்கு எதைப் பற்றியும் கவலையே கிடையாது. யார் என்ன சொன்னாலும் அதை சட்டையே பண்ணாம இவன் பாட்டுக்கு இவன் இஷ்டத்துக்குப் போயிட்டே இருப்பான். எத்தனையோ பொண்ணுங்க பின்னாடி போய் நூல் விட்டுப் பார்ப்பான், ஆனால் எல்லாருட்டயும் பல்பு மட்டும்தான் வாங்கியிருப்பான். அவன்ட்ட கேட்டால் செம மாஸ் மாமூன்னு ரொம்ப கூலாச் சொல்வான். செருப்படி வாங்கினா கூட சுவீட் வாங்குன மாதிரி க்யூட்டா காமிச்சிக்குவான். இந்த மாதிரி பையன்களை அஞ்சான்னு அசால்ட்டா சொல்றாங்க அவனோட ஃப்ரண்ட்ஸ்.

கதை திரைக்கதை வசனம் இயக்கம்: எக்ஸாமைக் கிலோக் கணக்கான பேப்பரில் எழுதியிருப்பாங்க. ஆனால் பூதக் கண்ணாடியே வைச்சுப் பார்த்தாலும் அதில் ஒரு விஷயம்கூடத் தேறாது. பிரதமரப் பத்திக் கேள்வி கேட்டிருந்தால், அவுங்களுக்குத் தெரிந்த அடப்பிரதமனப் (பாயாசம்) பத்தி எழுதிக்கொண்டே போவார்கள். அது நீயா நானா மாதிரி நீண்டுகிட்டே போகும். எப்போ முடியும்னு யாருக்குமே தெரியாது. இப்படி எழுதப்பட்ட எக்ஸாம் பேப்பரை எல்லாரும் கதை திரைக்கதை வசனம் இயக்கம்னு சொல்றாங்களாம்.

முண்டாசுப்பட்டி: தம்பிக்கு இடம் பொருள் ஏவலே கிடையாது. மனசுக்குப் பிடிச்ச பொண்ண எங்க பார்த்தாலும் காதலிக்க ஆரம்பிச்சிருவார். ஆஸ்பத்திரி, சுடுகாடு இப்படிப் பார்க்கிற இடங்களில் எல்லாம் கண்ணுக்குக் குளிர்ச்சியான, கலரான பொண்ணு கிடைச்சா போதும் மனசுக்குள்ள டூயட் பாடிட்டே, அந்தப் பொண்ணு கூட ஆஸ்திரேலியாவிலயோ ஹாங்காங்லயோ ட்ரீம் சாங்குங்கு ஸ்டெப் போடுற பையன் இவர். என்ன ஒண்ணு இவருக்கு ஃபோட்டோன்னா அலர்ஜி. யாராவது ஒரு பொண்ணு சேர்ந்து ஃபோட்டோ எடுத்துக்கலாம்னு சொன்னா போதும், தம்பி பதுங்கிருவார்.

ஜிகர்தண்டா: இவர் நம்ம வடிவேலு மாதிரி. ஊருக்குள்ள பெரிய பெரிய ரவுடிக்கெல்லாம் தலைவன் மாதிரி பீத்திக்குவார். ஆனா பார்ட்டி உண்மையில் சரியான தொடைநடுங்கி. ஏதாவது பிரச்சினைன்னா செமயா ஊடு கட்டுவார். ஆனால் களத்துல இறங்க வேண்டிய நிலைமை வந்துச்சுன்னா போதும் பார்ட்டி எப்படித்தான் எஸ்கேப் ஆகுறார்னு யாராலயும் கண்டுபிடிக்க முடியாது. அவ்வளவு ஸ்பீடா பறந்துருவார். சும்மா புழுதி மாதிரி கண்ணு முன்னாலயே காணாமப் போயிருவார்.

சதுரங்க வேட்டை: இவர் விதவிதமா ஏமாத்துவார். அம்மாவுக்கு சீரியஸ்னு புரபஸர்ட்ட பொய் சொல்லி காசு வாங்கி ஃப்ரண்டோஸோட ஜாலியா நூன் ஷோ போயிருவார். எக்ஸாம் ஹாலுக்குப் போனாப் போதும். டெஸ்க பார்த்து எழுதியே ஃபர்ஸ்ட் கிளாஸ்ல பாஸாயிருவார். எக்ஸாமினர்ட்ட போயி மூலையில உள்ள மோகனா உங்க ஃபோட்டாவை தன்னோட மொபைலில் ஸ்கீர்ன்சேவரா வச்சிருக்குன்னு ஒரு பிட்ட போடுவார். பிறகென்ன எல்லாரும் ரொம்ப ஃப்ரியா பிட் அடிக்கலாம். எக்ஸாம் முடிஞ்ச அரை மணி நேரம் கழிச்சுதான் எக்ஸாமினருக்கு என்ன நடந்ததுன்னே புரிஞ்சிருக்கும். அந்த அளவுக்குப் பேசிப் பேசியே ஆட்கள உஷார் பண்ணுற ஜகஜ்ஜால கில்லாடி இவர்.


அஞ்சான்கதை திரைக்கதை வசனம் இயக்கம்ஜிகர்தண்டாசதுரங்க வேட்டைஇருக்கு ஆனா இல்லகிண்டல்நையாண்டிகேலி

You May Like

More From This Category

More From this Author