Published : 10 Apr 2019 11:07 AM
Last Updated : 10 Apr 2019 11:07 AM

பல மிரட்டல்கள்... அச்சுறுத்தல்கள்... நெருக்கடிகள்.. -  கடந்து வந்த நிஜாமாபாத் விவசாயிகளின் புதிய வழிகாட்டும் முன்னுதாரண முடிவு

தெலங்கானா மாநிலம் நிஜாமாபாத் தொகுதி விவசாயிகள் ஆச்சரியகரமான, ஆனால் ஆட்சியாளர்களுக்கு அடி கொடுக்கும் ஒரு முடிவை எடுத்துள்ளது பலரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.

 

அதாவது வரும் மக்களவைத் தேர்தலில் தங்கள் தொகுதியில் நிற்கும் விவசாயிகளுக்கு வாக்களிப்பது என்றும் குறிப்பாக ஆளும் கட்சிக்கு தங்கள் வாக்குகள் இல்லை என்றும் திட்டவட்டமாக அறிவித்துள்ளனர், தங்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை ஆளும் கட்சிக்குத் தங்கள் வாக்குகள் இல்லை என்கின்றனர் இந்த விவசாயிகள்.

 

மேலும் இனி வரும் தேர்தல்களிலும் தாங்களே பெரிய எண்ணிக்கையில் போட்டியிடப்போவதாகவும் அவர்கள் ஆளும் கட்சிக்கு ‘கிலி’ ஏற்படுத்தியுள்ளனர்.  ‘விவசாயச் சமுதாயம் மற்ற கட்சிகளுக்கு வாக்களித்தாலும் கவலையில்லை, இந்தத் தேர்தலில் ஆளும் கட்சிக்கு வாக்களிக்கக் கூடாது’ என்று தர்மராம் கிராமத் தொகுதியின் வேட்பாளராக நிற்கும் விவசாயி ராஜேந்தர் ரெட்டி திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

 

 

பல்வேறு மண்டலங்களில் உள்ள விவசாய சங்கத்தினர் விவசாயிகள் ஒற்றுமைக் கூட்டத்தில் கலந்து கொண்டனர். இதில் உயர் நீதிமன்ற நீதிபதி ரச்சனா ரெட்டியும் கலந்து கொண்டார். இவர்தான் விவசாயிகளுக்காக கோர்ட்டில் வாதாடும் வழக்கறிஞர் ஆவார். தேர்தலை ஒத்தி வைப்பது, வாக்குச்சீட்டு முறை போன்றவற்றுக்காக விவசாயிகள் சார்பாக வாதாடிய வழக்கறிஞர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

கொருத்லா பகுதியில் போட்டியிடும் இன்னொரு வேட்பாளர் மல்லா ரெட்டி “விவசாயிகளிடையே ஒற்றுமை மேலோங்குகிறது. இவர்கள் விவசாயிகளுக்குத்தான் வாக்களிப்பார்கள். வரும் தேர்தல்களில் ஒரேயொரு விவசாயியை தேர்ந்தெடுத்து நிறுத்துவோம்” என்றார்.

 

போராடும் விவசாயிகளின் உணர்வை பாராட்டிய மல்லா ரெட்டி கூறும்போது, “பல அச்சுறுத்தல்கள், மிரட்டல்கள், நெருக்கடிகள் ஆகியவற்றுக்கு இடையே விவசாயிகள் தேர்தலில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்தனர். அச்சமின்றி களத்தில் குதித்துள்ளனர்.” என்றார்.

 

இந்த புதிய வழிதிறப்பு ஜனநாயக முன்னெடுப்பு முடிவில் அவர்கள் தங்கள் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண இன்னும் நெடுந்தூர செல்ல வேண்டும் என்று கூறும் மல்லா ரெட்டி, தேர்தலைத் தள்ளிவைக்கும், வாக்குச்சீட்டு முறை அமலாக்க கோரிக்கைகளில் கோர்ட் தலையிட முடியாது, என்கிறார்.

 

ஆனால் மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தில் சில சிக்கல்கள் இருப்பதை கோர்ட் சுட்டிக்காட்டியதையும் அவர் குறிப்பிட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x