தேர்தலுக்குப் பிந்தைய கூட்டணி சாத்தியமே..   ‘முதல் பணி’ மோடியைத் தோற்கடிப்பதே: ராகுல் காந்தி திட்டவட்டம்

தேர்தலுக்குப் பிந்தைய கூட்டணி சாத்தியமே..   ‘முதல் பணி’ மோடியைத் தோற்கடிப்பதே: ராகுல் காந்தி திட்டவட்டம்
Updated on
1 min read

நாட்டின் நலன் கருதி எதிர்க்கட்சிகள் எல்லாம் பாஜகவுக்கு எதிராக ஒன்று திரண்டுள்ளது, ஆகவே லோக்சபா தேர்தலுக்குப் பிந்தைய கூட்டணி நிச்சயம் சாத்தியமே, என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்தார்.

நம்பர் 1 பணி மோடியைத் தோற்கடிப்பதே என்கிறார் ராகுல் காந்தி. நாட்டின் பல இடங்களில் மதச்சார்பின்மைக் கூட்டணி அமைந்துள்ளது. நாடு முழுதும் வலுவான எதிர்க்கட்சி வேட்பாளர்களை பாஜக எதிர்கொண்டாக வேண்டும் என்றார் ராகுல்.

பிடிஐ செய்தி நிறுவனத்திற்கு அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:

ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளின் முதற்கட்ட தலையாய பணி மோடியைத் தோற்கடிக்க வேண்டும் என்பதே.  ஜனநாயகத்தையும் அரசியல் சாசனத்தையும் காப்பாற்ற வேண்டியது முதற்கண் அவசியம். இந்தியாவின் சமூக அமைப்பு மற்றும் இந்தியாவின் மதிப்பு மிக்க நிறுவனங்களை மோடி அரசு சீரழிப்பதை நாம் முதலில் தடுக்க வேண்டிய தேவை உள்ளது. அதாவது வளர்ச்சி மேம்படவும், பொருளாதாரம் முன்னோக்கிச் செல்லவும் வேலைவாய்ப்புகள் உருவாக்கவும் அநீதியையும் சமத்துவமின்மையையும் களையவும் நாம் பாஜகவை தோற்கத்தாக வேண்டும்.

எனவே தேர்தலுக்குப் பிந்தைய கூட்டணி நிச்சயமாகச் சாத்தியமே. மோடிக்கு எதிராக இந்திய மக்கள் நிற்கின்றனர்.

நாட்டின் நலனுக்காக பாஜக தோற்கடிக்கப்பட வேண்டும் என்ற உணர்வில் அனைத்து எதிர்க்கட்சிகளிடத்திலும் ஒரு புரிதல் உள்ளது. பாஜக நம் மதிப்பு நிறுவனங்களையும் தாக்கி அழிக்கப் பார்க்கிறது.  நம் பொருளாதாரத்தில் அது விளையாடிவிட்டது. இது இந்திய மக்களைக் காயப்படுத்தியுள்ளது. தேச நலன் கருதி இதனை எதிர்த்தாக வேண்டும்.

உ.பி.யில் கூட்டணி அமைந்துள்ளது. காங்கிரஸ் அந்தக் கூட்டணியில் இல்லை, ஆனாலும் அங்கு கூட்டணி அமைந்துள்ளது. ஜார்கண்டில் கூட்டணி அமைந்துள்ளது. ஜம்மு காஷ்மீர், தமிழ்நாடு, கர்நாடகா என்று எங்கும் கூட்டணி உள்ளது, எங்கு கூட்டணி இல்லை?

உ.பி. கூட்டணியில் காங்கிரஸ் இல்லை அது ஓகே. உ.பி.யில் காங்கிரஸ் அதன் கொள்கையையும் வேர்களையும் கட்டமைக்கும். நாம் போர்க்களம் காண்போம், ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளும் பாஜகவுக்கு எதிராக ஒன்று திரண்டுள்ளன.

இவ்வாறு கூறினார் ராகுல் காந்தி.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in