

விசாகப்பட்டினத்தில் தெலுங்கு தேசம் கட்சியின் வேட்பாளருக்காக நடிகர் பாலகிருஷ்ணா பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்த ஒரு தொண்டர் இவருடன் செல்ஃபி எடுக்க முயன்றார்.
இதனால் கோபமடைந்த நடிகர் பாலகிருஷ்ணா, அந்த தொண்டரை ஓட ஓட விரட்டிச் சென்று அடித்தார். இதனை அங்கிருந்த சிலர் தங்களது செல்போனில் வீடியோ எடுத்து அதனை தற்போது சமூக வலைத்தளங்களில் பரவ விட்டுள்ளனர். தெலுங்கு தேசம் கட்சியினரே இவரது செயலை கண்டிக்கும் அளவிற்கு இந்த விவகாரம் சென்றுள்ளது.
இதனை எதிர்க்கட்சியான ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியினர் சமூக வலைத்தளங்களில் பரப்பி வருகின்றனர். மேலும் இதுபோன்ற ஒரு கட்சி ஆந்திராவுக்குத் தேவையா? என கேட்கின்றனர். இதனால் பாலகிருஷ்ணாவின் ரசிகர்களும் சங்கடத்துக்கு உள்ளாகியுள்ளனர்.