

பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சித்து அதில் ஏற்பட்ட தோல்வியினால் ஆத்திரமடைந்த இளைஞர் 17 வயதுப் பெண்ணின் முகத்தில் ஆசிட் ஊற்றிய அதிர்ச்சி சம்பவம் பிஹாரில் நடந்துள்ளது.
பிஹாரில் பாகல்பூர் அருகே நேற்று நடந்த இச்சம்பவத்தின் விவரம்:
இதில் முக்கிய குற்றவாளியாக குற்றம்சாட்டப்பட்டுள்ள பிரின்ஸ், தன்னுடன் மூன்று பேரை சேர்த்துக்கொண்டு இக்குற்றச்செயலில் ஈடுபட முயற்சித்தார். தனது பக்கத்துவீட்டில் யாருமில்லாத நேரம்பார்த்து தனியே இருந்த பெண்ணை துப்பாக்கிமுனையில் பாலியல் பலாத்காரத்திற்கு பணியவைக்க மிரட்டியுள்ளார்.
இதில் பிரின்ஸ் உள்ளிட்ட மற்றவர்களும் அப்பெண்ணிடம் தவறாக நடக்க முயற்சி செய்து பார்த்துள்ளனர். ஆனால் அப்பெண் கடுமையாக எதிர்த்து போராடி அவர்களிடமிருந்து தப்பித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் அப்பெண்ணின் முகத்தில் ஆசிட்டை ஊற்றியுள்ளனர். சம்பவம் நடந்த இடத்தில் துப்பாக்கியும் பறிமுதல் செய்யப்பட்டது.
இவ்வாறு காவல் கண்காணிப்பாளர் ரூப் ரஞ்சன் ஹர்காவ் ஊடகங்களிடம் தெரிவித்தார்.
இச்சம்பவம் தொடர்பாக முக்கிய குற்றவாளியான பிரின்ஸ் கைது செய்யப்பட்டுள்ளார்.
பாதிக்கப்பட்ட பெண் தற்போது சிகிச்சைக்காக பாட்னா மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.