Last Updated : 16 Apr, 2019 09:29 PM

 

Published : 16 Apr 2019 09:29 PM
Last Updated : 16 Apr 2019 09:29 PM

இன்னொரு பணமதிப்பு நீக்க நடவடிக்கை வருமா? - மத்திய அமைச்சர் சுரேஷ் பிரபு நழுவல்

மத்திய வணிக மற்றும் தொழிற்துறை அமைச்சர் சுரேஷ் பிரபுவிடம் பணமதிப்பு நீக்கம் பற்றி கேள்வி எழுப்ப அதற்கு அவர் நழுவலான பதிலைத் தெரிவித்துள்ளார்.

 

கருப்புப் பணத்தை ஒழிப்பதில் ஏற்கெனவே மேற்கொண்ட பணமதிப்பிழப்பு நடவடிக்கை சரியான பலன் அளித்ததா? மீண்டும் ஒரு பணமதிப்பு நீக்க நடவடிக்கை எடுக்கப்படுமா என்ற கேள்வியை சுரேஷ் பிரபுவிடம் வைத்த போது, “நான் இது பற்றி கருத்து கூறப்போவதில்லை. நான் கூறுவது என்னவெனில் அது போன்ற நடவடிக்கை காலத்தைப் பொறுத்தது. கருப்புப் பணத்துக்கு எதிரான ஒரு அளவுகோலாக பணமதிப்பு நீக்கம் மேற்கொள்ளப்பட்டது, ஆனால் இன்னொரு பணமதிப்பு நீக்கம் கொண்டு வரப்படுமா, அது தேவையா என்பதைப் பற்றி நான் கூறப்போவதில்லை, காலம்தான் பதில் சொல்லும்.

 

நரேந்திர மோடி தலைமை அரசுக்கு கருப்புப் பணத்தை ஒழிப்பதில் அரசியல் சங்கல்பம் உள்ளது. அதே போல் சட்டவிரோத சொத்துச் சேகரிப்புக்கு எதிராக பல நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. இது எவ்வளவு கடினமாக இருந்தாலும் நடவடிக்கை எடுத்து வரப்படுகிறது. இதனால் என்ன அரசியல் நஷ்டம் வந்தாலும் கவலையில்லை. நாங்கள் இதனை செய்வதில் முனைப்பு காட்டி வருகிறோம், இந்தியா ஒரு வெளிப்படையான பொருளாதாரமாக இருக்க வேண்டுமென்று நாங்கள் விரும்புகிறோம்.

 

ஏழைகளுக்கு மிகப்பெரிய விரோதி கருப்புப் பணம்தான், இதனால் அவர்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.

 

அரசின் அரசியல் சங்கல்பம் கருப்புப் பண அச்சுறுத்தலை அகற்றுவதாகும். பல கமிட்டிகள் இதற்குள் நுழைந்து பார்த்தன, ஆனால் இந்த அரசுதான் முதன் முதலாக இதற்கு எதிராக செயல்படுகிறது, இன்னொரு கமிட்டி அமைப்பதில் பயனில்லை.

 

கருப்புப் பணத்தை அகற்ற நாங்கள் எடுத்த நடவடிக்கை இது குறித்த எங்களது கடப்பாட்டை உணர்த்தும்” என்றார் சுரேஷ் பிரபு

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x