Last Updated : 28 Apr, 2019 07:53 AM

 

Published : 28 Apr 2019 07:53 AM
Last Updated : 28 Apr 2019 07:53 AM

வெடிகுண்டு மிரட்டல் எதிரொலி; தென் மாநிலங்களில் தீவிர சோதனை

வெடிகுண்டு மிரட்டல் காரண மாக தமிழகம் உள்ளிட்ட தென்மாநி லங்களில் தீவிர சோதனை நடத்தப் பட்டு வருகிறது.

கடந்த ஈஸ்டர் பண்டிகையின் போது இலங்கையில் 3 தேவாலயங் கள், 3 நட்சத்திர ஓட்டல்கள் உட்பட 8 இடங்களில் சக்திவாய்ந்த குண்டுகள் வெடித்தன. இதில் 253 பேர் உயிரிழந்தனர். 500-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

இந்நிலையில், தமிழகம், புதுச் சேரி, கர்நாடகா, கேரளா, ஆந்திரா, தெலங்கானா, கோவா, மகாராஷ் டிரா உள்ளிட்ட மாநிலங்களில் தீவிர வாதிகள் வெடிகுண்டு தாக்கு தல் நடத்த வாய்ப்பு இருப்ப தாக கர்நாடக டிஜிபி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதைத் தொடர்ந்து தேவை யான முன்னெச்சரிக்கை நட வடிக்கைகளை எடுக்கும்படி தமிழக டிஜிபி, ரயில்வே டிஜிபி, சட்டம்-ஒழுங்கு சிறப்பு டிஜிபி, சென்னை மாநகர காவல் ஆணை யர், கடலோர காவல் குழும ஏடிஜிபி, தென் மண்டல ஐஜி, உளவுத்துறை மற்றும் நுண்ணறிவு பிரிவு ஐஜிக்கள், அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல் ஆணையர்களுக்கு தமிழக அரசின் முதன்மை செயலாளர் உத்தர விட்டார்.

அவரது உத்தரவைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டன. குறிப்பாக ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் போலீஸார் தீவிர சோத னையில் ஈடுபட்டனர். பாம்பன் பாலம் உட்பட பல முக்கிய பகுதி களில் சோதனை நடத்தப்பட்டன. குறிப்பிட்ட சில இடங்களில் வாகன சோதனை நடத்தப்பட்டன. கோயில் களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப் பட்டது. பக்தர்கள் அனைவரும் சோதனைக்கு பின்னரே உள்ளே அனுமதிக்கப்பட்டனர். ராமநாத புரத்தில் 2-வது நாளாக நேற் றும் சோதனை தொடர்ந்து நடந்தது.

தொடர் அச்சுறுத்தலால் தமிழகம் முழுவதும் நேற்று பகலிலும் வாகன சோதனை நடத்தப்பட்டது. வாகன சோதனை மற்றும் பாது காப்பு நடவடிக்கைகளை மறுஉத் தரவு வரும் வரை தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும் என்று டிஜிபி டி.கே.ராஜேந்திரன் உத்தர விட்டுள்ளார்.

பெங்களூரு போலீஸ் கட்டுப் பாட்டு அறையை தொலைபேசியில் தொடர்பு கொண்ட மர்ம நபர் ஒருவர், "கர்நாடகா, தமிழகம் உள்ளிட்ட தென்மாநிலங்களில் தீவிரவாதிகள் தொடர் வெடிகுண்டு தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளனர். முக்கிய நகரங்களில் தாக்குதல் நடத்துவதற்காக 19 தீவிரவாதிகள் தமிழகத்தின் ராமநாதபுரத்தில் நுழைந்துள்ளனர். இவர்கள் அங் கிருந்து வெவ்வேறு நகரங்களுக்கு சென்று தொடர் வெடிகுண்டு தாக்கு தல் நடத்தப் போகிறார்கள். குறிப் பாக ரயிலில் குண்டு வெடிக்கும்'' எனக் கூறிவிட்டு, அழைப்பை துண்டித்தார்.

இதுதொடர்பாக, கர்நாடக காவல் துறை டிஜிபி நீலமணி ராஜு, பெங்களூரு மாநகர காவல் ஆணையர் சுனில் குமார் உள் ளிட்ட உயர் அதிகாரிகளுடன் ஆலோ சனை நடத்தினார். கர்நாடகாவில் ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்களில் தீவிர சோதனை நடத்தப்பட்டு வருகிறது

இதனிடையே பெங்களூரு குற் றப்பிரிவு போலீஸார் தொலைபேசி யில் பேசிய நபரை நேற்று காலை யில் பிடித்தனர். விசாரணையில், அவரது பெயர் சுந்தர மூர்த்தி என் றும், ஓய்வு பெற்ற ராணுவ வீரர் என்பதும் தெரியவந்தது. தற்போது பெங்க ளூரு ராணுவ மைய‌த்தில் லாரி ஓட்டுநராக பணியாற்றி வருவதாக அவர் தெரிவித்தார். வெடிகுண்டு புரளி கிளப்பினால் என்ன நடக்கும் என்பதை அறிந்து கொள்வதற்காக தவறாக தகவல் கொடுத்ததாக கூறியுள்ளார்.

இதையடுத்து குற்றப்பிரிவு போலீஸார் அவரை பெங்களூரு விதானசவுதா காவல் நிலையத் தில் நேற்று மாலை ஒப்படைத் தனர். சுந்தர மூர்த்தி மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய் யப்பட்டுள்ளது.

இதுகுறித்து கர்நாடக போலீ ஸார் கூறும்போது, "இலங்கையில் தொடர் குண்டுவெடிப்புகள் நிகழ்த் தப்பட்டுள்ளன. அந்த தாக்கு தலை நடத்திய தீவிரவாதிகளுக் கும் தமிழகத்தில் கைதான இளை ஞர்களுக்கும் தொடர்பிருக்கிறது. எனவே எந்த எச்சரிக்கையையும் அலட்சியமாகக் கருத முடியாது. பெங்களூரு, மைசூரு உட்பட மாநிலம் முழுவதும் உஷார் நிலையில் வைக்கப்பட்டிருக்கிறது" என்று தெரிவித்தனர்.

கேரளா, ஆந்திரா, தெலங்கானா, கோவா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களிலும் அந்தந்த மாநில போலீஸார் விரிவான பாது காப்பு ஏற்பாடுகளை செய் துள்ளனர். வடமாநிலங்களிலும் போலீஸார் உஷார் நிலையில் உள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x