2020-ம் ஆண்டுக்குள் 22 லட்சம் பணியிடங்கள் நிரப்பப்படும் : ராகுல் காந்தி உறுதி

2020-ம் ஆண்டுக்குள் 22 லட்சம் பணியிடங்கள் நிரப்பப்படும் : ராகுல் காந்தி உறுதி
Updated on
1 min read

காங்கிரஸ் மத்தியில் ஆட்சிக்கு வந்தால், 2020-ம் ஆண்டு மார்ச் 31-ம் தேதிக்குள் அரசால் நிரப்பப்படாமல் இருக்கும் 22 லட்சம் பணியிடங்கள் நிரப்பப்படும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வாக்குறுதி அளித்துள்ளார்.

மக்களவைத் தேர்தல் வரும் ஏப்ரல் 11-ம் தேதி முதல் மே 19-ம் தேதிவரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. வேட்பாளர்களை அறிவித்துள்ள பாஜக, காங்கிரஸ் மற்றும் மாநிலக் கட்சிகள் பிரச்சாரத்தில் தீவிரம் காட்டியுள்ளன.

காங்கிரஸ் கட்சி தங்களின் தேர்தல் அறிக்கையை நாளை வெளியிடும் நிலையில், அந்தக் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி முக்கிய வாக்குறுதிகளையும், காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் செய்யப்படும் சீர்திருத்தங்களையும் அறிவித்து வருகிறார்.

நியாயம் எனும திட்டத்தின் மூலம் 5 கோடி ஏழைக் குடும்பங்களுக்கு ஆண்டுக்கு ரூ.72 ஆயிரம் குறைந்தபட்ச ஊதியமாக வழங்கும் திட்டத்தைக் கொண்டுவருவோம் என ராகுல் காந்தி அறிவித்தார். வேலையின்மை பிரச்சினைக்குத் தீர்வு காணப்படும். நிதி ஆயோக் நீக்கப்பட்டு மீண்டும் திட்டக்குழு கொண்டுவரப்படும் என வாக்குறுதி அளித்தார் ராகுல் காந்தி.

இந்நிலையில் ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், "2019-ம் ஆண்டு மத்தியில் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால், மத்திய அரசால் நிரப்பப்படாமல் இருக்கும் 22 லட்சம் பணியிடங்கள் நிரப்பப்படும். ஆட்சிக்கு வந்த ஒன்றரை ஆண்டுக்குள் அதாவது 2020-ம் ஆண்டு மார்ச் 31-ம் தேதிக்குள் அனைத்து காலியிடங்களும் நிரப்பப்படும் என உறுதியளிக்கறேன்.

மத்திய அரசிடம் இருந்து மாநிலங்களுக்கு சுகாதாரம், கல்வி, உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்கு பகிர்ந்தளிக்கப்படும் நிதி தொடர்பான பணியிடங்களில் நிரப்பப்படாமல் இருக்கும் ஒவ்வொரு காலியிடமும் நிரப்பப்படும்" எனத் தெரிவித்துள்ளார்.

ஒரே டம்ளரில் 5 சுவை: ‘லேயர் டீ’யில் அசத்தும் மாணிக்கம்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in