Last Updated : 10 Apr, 2019 12:00 AM

 

Published : 10 Apr 2019 12:00 AM
Last Updated : 10 Apr 2019 12:00 AM

‘பிஎம் நரேந்திர மோடி’ படத்துக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு

பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாறு, ‘பிஎம் நரேந்திர மோடி’ என்ற பெயரில் திரைப்படமாக தயாரிக்கப்பட்டுள்ளது. மக்களவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் இத்திரைப்படத்தை திரையிட அனுமதிக்கக் கூடாது என தேர்தல் ஆணையத்திடம் காங்கிரஸ் உள்ளிட்ட சில கட்சிகள் புகார் அளித்துள்ளன.

மேலும் இப்படத்தை வெளியிட தடை விதிக்கக் கோரி, காங்கிரஸ் செயற்பாட்டாளர் ஒருவர் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான அமர்வு விசாரித்து வந்தது. இந்நிலையில் நேற்று இந்தப் படத்துக்கு தடை விதிக்க மறுப்பு தெரிவித்து மனுவை தள்ளுபடி செய்தனர். மேலும் இந்த விவகாரம் தொடர்பாக தேர்தல் ஆணையத்தை அணுகுவதுதான் பொருத்தமாக இருக்கும் என்று தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x