

மலேசியாவுடனான உறவை பலப்படுத்துவதில் மிகுந்த ஆர்வம் கொண்டுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.
மலேசியாவின் இயற்கை வளங்கள் துறை அமைச்சர் டட்டூக் செரி ஜி. பழனிவேல், பிரதமர் நரேந்திர மோடியை டெல்லியில் செவ்வாய்க்கிழமை சந்தித்துப் பேசினார்.
அப்போது மலேசிய பிரதமர் நஜீப் ரசாக் சார்பில் மோடியை தங்கள் நாட்டுக்கு வருமாறு பழனிவேல் அழைப்பு விடுத்தார். இதை ஏற்றுக்கொண்ட பிரதமர் மோடி, இருதரப்புக்கும் சவுகரிய மான ஒருநாளில் தாம் மலேசியா வருவதாக கூறினார்.
இந்த சந்திப்பின்போது, பிராந்திய அமைதி, ஸ்திரத்தன் மைக்கு இந்தியா, மலேசியா மற்றும் பிற ஆசியன் அமைப்பு நாடுக ளிடையே நெருங்கிய ஒத்துழைப் பின் அவசியத்தை மோடி வலியுறுத் தினார். மேலும் இரு நாடுகளிடையே வர்த்தகம், முதலீடு, சுற்றுலா, கல்வி மற்றும் கலாச்சார உறவு களை பலப்படுத்துவதற்கு பிரதமர் விருப்பம் தெரிவித்தார்.
வனங்கள், வன விலங்குகள் பாதுகாப்பு, பருவநிலை மாற்றம் குறித்த ஆய்வு, இரு நாடுகளின் மக்கள் இடையிலான உறவுகள் ஆகியவற்றை வலுப்படுத்த மலேசிய அமைச்சர் ஆர்வம் தெரிவித்தார்.
மலேசிய பன்முக சமுதாயத்தில் 20 லட்சம் இந்திய சமூகத்தினர் இடம்பெற்று, அந்நாட்டின் பொருளா தார வளர்ச்சிக்கு பங்காற்றி வருவதற்கு மோடி மகிழ்ச்சி தெரிவித்தார்.