அசாமில் நுழைய அல் காய்தா முயற்சி: முறியடிப்போம் என கோகோய் உறுதி

அசாமில் நுழைய அல் காய்தா முயற்சி: முறியடிப்போம் என கோகோய் உறுதி
Updated on
1 min read

இந்தியாவில் கால்பதிக்கப் போவதாக அல் காய்தா தீவிர வாத அமைப்பு வீடியோ வெளியிட்டதைத் தொடர்ந்து, அசாமில் நுழைய அல் காய்தா முயற்சிப்பதாக அம்மாநில முதல்வர் தருண் கோகோய் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் செய்தி யாளர்களிடம் கூறியதாவது:

"அசாமில் நுழைய அல் காய்தா முயற்சிப்பதாகத் தகவல் கிடைத்துள்ளது. அதைத் தடுக்க அனைத்து முயற்சி களையும் மேற்கொண்டு வருகிறோம். அவர்கள் 'உல்ஃபா' தீவிரவாதிகளுடனும் தொடர் பில் இருக்கலாம். இந்த இரு அமைப்புகளும் ஒன்றை யொன்று விமர்சிக்க வில்லை. எனவே, நேரடியாகத் தொடர்பு இல்லையென்றாலும், இவர் களுக்கிடையே நல்ல புரிதல் இருக்கலாம். துர்கா பூஜையின் போது ஏதேனும் அசம்பா விதங்கள் நடைபெறலாம் என்று தகவல் கிடைத் துள்ளது. அதை முறியடிக்கவும் தயாராக உள்ளோம். மேலும், அவ்வப்போது நிகழும் போடோ லாந்து பிரச்னை களும் இத்தகைய தீவிரவாத அமைப்புகளுக்கு வாய்ப்பாக அமைகின்றன".

இவ்வாறு அவர் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in