கர்நாடகத்தை விட்டு வெளியேறுகிறார் நித்யானந்தா: திருவண்ணாமலைக்கே திரும்ப திடீர் முடிவு

கர்நாடகத்தை விட்டு வெளியேறுகிறார் நித்யானந்தா: திருவண்ணாமலைக்கே திரும்ப திடீர் முடிவு
Updated on
1 min read

ஆண்மை பரிசோதனையின்போது தன்னை நிர்வாணப்படுத்தி சித்ரவதை செய்ததாகவும், இதனால் கர்நாடகத்தை விட்டு விரைவில் வெளியேறப் போவதாக செவ்வாய்க்கிழமை தனது சீடர்கள் முன்னிலையில் நித்யானந்தா வேதனையுடன் தெரிவித்துள்ளார். இதனை வரவேற்று பிடதியில் பல்வேறு கன்னட அமைப்புகளை சேர்ந்தவர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.

பாலியல் புகாருக்கு உள்ளான நித்யானந்தாவுக்கு ஆண்மை பரிசோதனை நடத்த உச்ச நீதிமன்றம் கடந்த மாதம் உத்தரவிட்டது.

இதையடுத்து திங்கள்கிழமை பெங்களூர் விக்டோரியா மருத்துவமனையில் நித்யானந்தாவுக்கு 7 விதமான ஆண்மை பரிசோதனைகள் நடத்தப்பட்டது. சுமார் 6 மணி நேரம் நடைபெற்ற பரிசோதனைக்கு அவர் ஒத்துழைக்க மறுத்திருக்கிறார். அதனால் போலீஸாரும், மருத்துவர்களும் கட்டாயப்படுத்தி பணிய வைத்துள்ளனர்.

திருவண்ணாமலைக்கே செல்கிறேன்

இந்நிலையில் பெங்களூர் அருகே உள்ள பிடதி ஆசிரமத்தில் செவ்வாய்க் கிழமை தனது சீடர்களிடம் நித்யானந்தா பேசினார். அப்போது, ‘‘துறவியாக இருக்கும் என்னிடம் ஆண்மை பரிசோ தனை என்ற பேரில் மிகவும் அருவருப் பாக நடந்துகொண்டார்கள். மருத்துவ மனையில் என்னை நடத்தியவிதம் மிகவும் வேதனை தருகிறது.

உலகம் முழுவதும் லட்சக்கணக் கானவர்கள் மதித்து வணங்கும் என்னை கர்நாடக போலீஸாரும், மருத்து வர்களும் அவமதித்துவிட்டார்கள். போதிய உணவும் தண்ணீரும் தரவில்லை. சாதாரண மனிதனுக்கு தரும் மரியாதையைக்கூட கர்நாடக போலீஸார் எனக்கு தரவில்லை.

எனது போதனைகளை மதிக்கத் தெரியாத மண்ணில் வாழ்வது வருத்தமாக இருக்கிறது. ஆகவே பிடதியில் இருக்கும் எனது ‘தியானபீடம்’ ஆசிரமத்தில் இருந்து விரைவில் திருவண்ணாமலை செல்ல திட்டமிட்டு இருக்கிறேன். வழக்கம் போல தினசரி பூஜைகளும், சிறப்பு யாகங்களும், சொற்பொழிவுகளும் திருவண்ணாமலையில் தொடர்ந்து நடைபெறும்.

நான் திருவண்ணாமலையில் இருந்து இயங்கினாலும் பிடதி தியான பீட ஆசிர மத்துக்கு அவ்வப்போது வருவேன்’’ என வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

கன்னட அமைப்புகள் கொண்டாட்டம்

நித்யானந்தா கர்நாடகத்தை விட்டு வெளியேறுவதாக அறிவித்துள்ள தகவல் வெளியானதால் பல்வேறு இடங்களில் கன்னட அமைப்புகள் பட்டாசு வெடித்து கொண்டாட்டங்களில் ஈடுபட்டன.

நித்யானந்தாவின் 'தியான பீட ஆசிரமம்' பெங்களூரை அடுத்துள்ள மைசூர் நெடுஞ்சாலையில் பிடதியில் இருக்கிறது. 2003-ம் ஆண்டு தொடங்கப் பட்ட இந்த ஆசிரமம் சுமார் 22 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இங்கு 4 கோயில்கள், சீடர்கள் தங்கும் விடுதி, பக்தர்கள் தங்கும் அறை, மருத்து வமனை, 3 மண்டபங்கள், 100 ஆண்டு பழமையான ஆலமரம், பிரம்மாண்டமான சிவலிங்கம், மிகப்பெரிய மைதானம் ஆகியவை உள்ளன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in