Last Updated : 01 Apr, 2019 06:46 AM

 

Published : 01 Apr 2019 06:46 AM
Last Updated : 01 Apr 2019 06:46 AM

காங்கிரஸ் கட்சியில் இணைய லாலு பிரசாத் அறிவுறுத்தினார்: சத்ருகன் பேட்டி

பிஹார் மாநிலம் பாட்னா சாஹிப் தொகுதி பாஜக எம்.பி.யான சத்ருகன் சின்ஹா, கடந்த வாரம் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந் தியை சந்தித்து பேசினார். அதன் பிறகு, காங்கிரஸில் விரைவில் இணையவுள்ளதாக அவர் கூறினார்.

இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக பிடிஐ செய்தி நிறு வனத்துக்கு அவர் நேற்று பேட்டி யளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

பாஜகவில் வாஜ்பாய் இருந்த காலகட்டத்தில், கட்சியில் ஜனநாயகம் செழித்தோங்கி யிருந்தது. எந்தவொரு விஷய மாக இருப்பினும், அனைத்து நிர்வாகிகளுடன் கலந்தாலோ சித்து முடிவெடுக்கும் ஆரோக்கிய மான சூழ்நிலை இருந்தது.

ஆனால், தற்போது உள்ள பாஜகவில் ஜனநாயகம் என்பது அறவே இல்லை. மாறாக, அங்கு சர்வாதிகாரப் போக்கே நிலவுகிறது. மூத்த தலைவர்களான அத்வானி, முரளி மனோகர் ஜோஷி உள்ளிட்டோருக்கு மரி யாதை தரப்படுவதில்லை.

இதன் காரணமாகவே, அக்கட்சி யிலிருந்து விலகி காங்கிரஸில் இணையவுள்ளேன். தற்போதைய சூழலில், அறிவார்ந்த தேசியக் கட்சியாக காங்கிரஸ் மட்டுமே விளங்குகிறது.

மேலும், ராகுல் மிகவும் திறம் படவும், தொலை நோக்கு பார்வை யுடனும் செயல்பட்டு வருகிறார். எனவே, எனது குடும்ப நண்பரும், ராஷ்ட்ரீய ஜனதா தளக் கட்சித் தலைவருமான லாலு பிரசாத்துடன் கலந்தாலோசித்தேன். அவரும் காங்கிரஸில் நான் இணைய வேண்டும் என்று அறிவுறுத்தினார். இவ்வாறு சத்ருகன் சின்ஹா கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x