Last Updated : 22 Apr, 2019 05:11 PM

 

Published : 22 Apr 2019 05:11 PM
Last Updated : 22 Apr 2019 05:11 PM

காங்கிரஸ் அச்சப்பட்டது- நாங்கள் தீவிரவாதத்தை ஒடுக்க துணிச்சலான முடிவுகள் எடுத்தோம்: பிரதமர் மோடி பெருமிதம்

தீவிரவாதத்துக்கு எதிராக துணிச்சலான முடிவுகள் எடுக்க காங்கிரஸ் கட்சி அச்சப்பட்டது. ஆனால், நாங்கள் தைரியமான முடிவுகளை எடுத்து தீவிரவாதத்தை ஒடுக்கியுள்ளோம் என்று பிரதமர் மோடி பெருமிதத்தோடு குறிப்பிட்டார்.

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள நாசிக் மாவட்டத்தில் சிவசேனா வேட்பாளர்களை ஆதரித்து இன்று பிரமதர் மோடி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியதாவது:

நாங்கள் ஆட்சிக்கு வருவதற்கு முன் அதாவது, 2014-ம் ஆண்டுக்குமுன் நாட்டில் நிலைமை எப்படி இருந்தது. நாட்டின் பல்வேறு இடங்களில் குண்டுவெடிப்புகள் நடந்தன. மும்பை, புனே, ஹைதராபாத், வாரணாசி, அயோத்தி, ஜம்மு ஆகிய நகரங்களில் அடிக்கடி குண்டுவெடிப்புகள் நிகழ்ந்தன.

ஆனால் நாங்கள் ஆட்சிக்கு வந்தபின், தீவிரவாதத்துக்கு எதிராக துணிச்சலான பல முடிவுகளை எடுத்து தீவிரவாதத்தை ஒடுக்கினோம். ஜம்மு காஷ்மீரில் ஒரு சில இடங்களில் மட்டுமே தீவிரவாத செயல்கள் நடக்கின்றன. நாங்கள் எடுத்து துணிச்சலான நடவடிக்கைகள் எதையும் காங்கிரஸ் எடுக்க அச்சப்பட்டது. நாங்கள் துணிந்து செய்தோம்.

அப்போதிருந்த தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகள் என்ன செய்தன, தீவிரவாத தாக்குதல்கள் நடந்தவுடன் இரங்கல் கூட்டம் நடத்தினார்கள், வருத்தம் தெரிவித்தார்கள். உலக நாடுகளிடம் பாகிஸ்தான் எங்களை இவ்வாறு செய்துவிட்டார்கள் என்று அழுதுபுலம்பினார்கள். அப்போது இருந்த உங்கள் காவலாளி என்ன செய்தார்,?

ஆனால், ஆனால் இன்று நிலைமை மாறிவிட்டது. இப்போதுள்ள உங்கள் காவலாளி காங்கிரஸ் என்சிபிஅரசின் துணிச்சல் இல்லாத நடவடிக்கைகள் அனைத்தையும் மாற்றிவிட்டார்.

மாநிலத்தில் செயல்படும் இந்துஸ்தான் ஏரோநாட்டிகல் நிறுவனத்தையும் அப்போது ஆண்ட காங்கிரஸ் கட்சி சிதைத்துவிட்டது. நாசிக்கில் இருந்த அந்த எச்ஏஎல் அமைபும் மோசமானநிலைக்கு வந்துவிட்டது. இதனால்தான் உள்நாட்டில் பாதுகாப்பு தளவாடங்களை தயாரிக்க மேக் இன் இந்தியா திட்டத்தை அதிகப்படுத்தியுள்ளோம்.

நாங்கள் ஆட்சிக்குவந்தபின் நடந்த தீவிரவாதிகளின் புகலிடத்திலேயே, அவர்கள் இருக்கும் இடத்திலேயே சென்று தாக்குதல்நடத்தி பாகுபாடின்றி அனைவரையும அழித்தோம். அனைத்து தீவிரவாதிகளையும் உலகில் எங்கு மறைந்தாலும் கண்டுபிடித்து மோடி அழித்துவிடுவார் என்று தீவிரவாதிகள் தெரிந்து வைத்திருந்தனர்.

கடந்த இரு கட்டமாக நடந்த மக்களவைத் தேர்தலில் மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்ததைப் பார்த்த எதிர்க்கட்சியினர் தூக்கமின்றி தவித்து வருகிறார்கள்.

இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x