Published : 07 Apr 2019 06:28 AM
Last Updated : 07 Apr 2019 06:28 AM

பல தலைமுறைகளாக எந்த நடவடிக்கையும் இல்லை; காங்கிரஸ் இருக்கும் வரை வறுமை ஒழியாது: ஒடிசாவில் பிரதமர் மோடி சரமாரி குற்றச்சாட்டு

‘‘காங்கிரஸ் இருக்கும் வரையில் வறுமை ஒழியாது. காங்கிரஸ் இல் லாவிட்டால், வறுமை தானாகவே காணாமல் போய்விடும்’’ என்று ஒடிசா பிரச்சாரத்தில் பிரதமர் நரேந் திர மோடி சரமாரியாகக் குற்றம் சாட்டினார்.

ஒடிசா மாநிலத்தின் மேற்குப் பகுதியில் உள்ள பலாங்கிர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட சோனேபூரில், பாஜக சார்பில் நேற்று பொதுக் கூட்டம் நடந்தது. இதில் பிரதமர் மோடி பேசியதாவது:

நாட்டில் உள்ள வறுமையை, காங்கிரஸ் கட்சி ‘அரசியல் ஆயுத மாக’ பயன்படுத்தி வருகிறது. காங்கிரஸிடம் இருந்து விலகி இருப்பதுதான் வறுமையை ஒழிக்க மிகச்சிறந்த வழி. வறுமையைப் பற்றி பேசி அரசியல் லாபம் அடை வதுதான் காங்கிரஸின் வழக்கம். காங்கிரஸ் இருக்கும் வரையில் வறுமை ஒழியாது. காங்கிரஸ் இல்லாவிட்டால், வறுமை தானா கவே காணாமல் போய்விடும்.

நாட்டில் வறுமையை ஒழிப்ப தாக, விரட்டுவதாக பல தலைமுறை களாக காங்கிரஸ் கூறி வருகிறது. ஆனால், அதற்கு எந்த நடவடிக் கையும் எடுக்கவில்லை. காங் கிரஸை போலவே ஒடிசா மாநிலத் தில் பிஜு ஜனதா தள கட்சியும் வறுமையை அரசியல் லாபத் துக்காகப் பயன்படுத்துகிறது. இவ் வாறு மோடி பேசினார்.

ஒடிசாவில் பழங்குடியினத்தவர் கள் அதிகம் வசிக்கும் சுந்தர்கர் பகுதியில் நடந்த கூட்டத்தில் மோடி நேற்று பேசியதாவது:

இந்த நாட்டின் காவலாளி (மோடி), பாகிஸ்தானுக்குள் நுழைந்து தீவிரவாதிகள் முகாம் மீது தாக்குதல் நடத்த துணிச்சலுடன் முடிவெடுத்தார். ஆனால், ராணுவப் படை வீரர்களை காங்கிரஸ் கட்சி அவமானப்படுத்துகிறது. ராணுவத் துக்கு வழங்கப்பட்ட அதிகாரங் களை நீக்க காங்கிரஸ் முயற்சிக் கிறது.

கடந்த காலங்களில் கூட மத்தியில் பல ஆட்சிகள் இருந்தன. எனினும், ‘சர்ஜிக்கல் ஸ்டிரைக்’ நடவடிக்கை எடுப்பது பற்றி எந்த அரசும் சிந்தித்துக் கூட பார்க்கவில்லை. எல்லை தாண்டி தீவிரவாத முகாம்களை அழிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை. ஆனால், தீவிரவாதிகளுக்கும் மாவோயிஸ்டுகளுக்கும் அடைக் கலம் கொடுப்பவர்களை (பாகிஸ் தான்) பாதுகாக்க காங்கிரஸ் முயற்சிக்கிறது.

இந்தச் சூழ்நிலையில், தெளி வான கொள்கையுடைய, அனைத்துத் தரப்பினரின் வளர்ச்சிக்கும் பாடுபடக் கூடிய அரசு வேண்டுமா? அல்லது ஊழல் நிறைந்த, கொள்கை எதுவும் இல் லாத அரசு வேண்டுமா என்பதை மக்கள்தான் தீர்மானிக்க வேண்டும்.

ஒடிசாவில் இந்த முறை பல தொகுதிகளில் தாமரை மலரும். சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக வெற்றியை சுவைக்கும். அதேபோல் நாட்டின் பாதுகாப்புக்கு பலமான தீர்க்கமான அரசு மத்தி யில் அமைய வேண்டும் என்று மக்கள் விரும்புகின்றனர். பாஜக மட்டும்தான் அது போன்ற ஆட்சியை மத்தியில் தரமுடியும்.

இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

ஒடிசாவில் மக்களவைத் தேர்தலுடன் சட்டப்பேரவைக்கும் தேர்தல் நடைபெறுகிறது. இந்த மாநிலத்தில் ஏப்ரல் 11, 18, 23, 29 ஆகிய தேதிகளில் 4 கட்டங்களாக வாக்குப் பதிவு நடக்கிறது.

பாஜக உருவான நாள்

பாஜகவின் 39-வது ஆண்டு தின விழாவை முன்னிட்டு பிரதமர் மோடி கூறியிருப்பதாவது:

தொண்டர்களின் வியர்வை யால் பிறந்தது பாஜக. ஒரு குடும்பத் தினராலோ அல்லது பணத்தாலோ பாஜக உருவாகவில்லை. தொண் டர்களின் கடும் உழைப்பு, வியர்வை யால் பாஜக இன்று பல மடங்கு பிரம்மாண்டமாக வளர்ந்துள்ளது.

தீன்தயாள் உபாத்யாயா, அடல் பிஹாரி வாஜ்பாய், அத்வானி, ஜகன்னாதராவ் ஜோஷி, ராஜ்மாதா சிந்தியா, முரளி மனோகர் ஜோஷி போன்ற பெரும் தலைவர்களால் பாஜக வழிநடத்தப்பட்டது. இந்த நேரத்தில் பாஜக.வின் ஒவ்வொரு தொண்டருக்கும் நான் வணக்கம் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு மோடி கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x