Published : 02 Apr 2019 04:48 PM
Last Updated : 02 Apr 2019 04:48 PM

‘ஒரு ரூபாய் 15 பைசாவான அவலம்’: ராஜீவ் காந்தியை மேற்கோள் காட்டி காங்கிரஸ் கட்சியை மோடி கடும் விளாசல்

ஒடிசா மாநிலத்தின் -காலஹந்தி-பலாங்கிர்-கொரபுத் ஆகிய இடங்கள் கேபிகே பகுதி என்று அழைக்கப்படுகிறது. இங்கு கடந்த 5 நாட்களில் 2 வது பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி தேர்தல் பிரச்சார உரையாற்றினார்.

 

அப்போது காங்கிரஸ், பிஜு ஜனதாதள் கட்சிகளை கடுமையாக விமர்சித்தார் மோடி.

 

“இத்தகைய அரசியல் கட்சிகள் (காங்கிரஸ், பிஜு ஜனதாதளம்) ஏழைகள் ஏழைகளாக இருப்பதற்காகவே சதி செய்கின்றனர். ஏழைகளின் தலையெழுத்தை மாற்ற இவர்கள் தரப்பிலிருந்து ஒரு துரும்பைக் கூட கிள்ளிப் போடவில்லை. ஏழைகள் அவர்களுக்கு வாக்கு வங்கி மட்டுமே.

 

இவர்கள் செய்த துரோகத்தினால் ஏழைகளுக்கு ஆம்புலன்ஸ் வசதி கூட கிடைக்கவில்லை, இவர்களின் ஆட்சியின் லட்சணத்தினால் பலர் இந்த மாநிலத்தை விட்டு பிழைப்புக்காக வெளிமாநிலம் சென்று விட்டனர். இந்த துரோகத்தினால் ஒடிசா வளர்ச்சிப்பாதையில் பின் தங்கி விட்டது.

 

‘காங்கிரஸின் தோல்விகள்’

 

காலஹந்தியின் அடையாளத்துடன் காங்கிரஸ் தொடர்புடையது. அதாவது தங்கள் தோல்வியை பறைச்சாற்றும் அவர்களது அறிக்கைதான் அந்த அடையாளம். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி ஒருமுறை காலஹந்தி பற்றிக் குறிப்பிடுகையில் டெல்லியிலிருந்து ஏழைமக்களுக்காக 1 ரூபாய் அனுப்பினால் 15 காசுகள்தன ஏழைகளிடத்தில் சேர்ப்பிக்கப்படுகிறது என்றார். அப்போதெல்லாம் காங்கிரஸ் என்ற கட்சிதான் பஞ்சாயத்து முதல் நாடாளுமன்றம் வரை ஆட்சி செலுத்தியது. இருப்பினும் அவர்கள் வாயிலிருந்தே இப்படியொரு வார்த்தை வெளிவருகிறது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

 

அதாவது ராஜீவ் காந்தியின் இந்தக் கூற்று தெரிவிப்பது என்னவெனில் டெல்லியிலிருந்து அனுப்பப்படும் 1 ரூபாய் சிலபலகைகளினால் 15 பைசாவாக குறைந்துள்ளது என்பதே, ஒரு ரூபாய் மெருகேற்றப்பட்டு 15 காசாகி விட்டது போலும். மீதி 85 காசுகளை கை (காங்கிரஸ் சின்னம்) உறிஞ்சி விட்டது போலும்.

 

சரி தங்கள் தோல்வியை ஏற்றுக் கொண்டாகி விட்டது, பிறகு காங்கிரஸ் என்ன செய்தது? 100 காசுகளும் ஏழைமக்களிடம் சேருவதை அவர்கள் தானே உறுதி செய்ய வேண்டும்? இது அவர்கள் பொறுப்பல்லவா? இவர்கள் நோயை அடையாளம் காண்கின்றனர், ஆனால் தீர்வு சொல்வதில்லை. மோடியிடம் மட்டும்தான் நோய்க்கான சிகிச்சை உள்ளது.

 

காங்கிரஸ் ஆட்சி ரிமோட் கண்ட்ரோலினால் கட்டுப்படுத்தப்பட்ட காலங்களின் பத்தாண்டுகளுக்குப் பிறகு ராஜிவ் காந்தி காலத்தை விட கொஞ்சம் மேம்பாடு அடைந்ததாக கூறியது, அதாவது இவர்கள் காலத்தில் 15 காசுகள் 16 காசுகளாக உயர்ந்திருக்கிறது. இவ்வளவு ஆண்டுகளில் ஏழைகளுக்கு காங்கிரஸ் அரசினால் 1 பைசா மட்டுமே முன்னேற்றம் விளைந்துள்ளது.

 

மக்கள் பணத்தை பிடுங்கித் தின்பவர்கள் மீது நீங்கள் இன்னமும் நம்பிக்கை வைத்திருக்கிறீர்களா? 70 ஆண்டுகளாக மக்களின் உரிமை சூறையாடப்பட்டுள்ளது.  இவர்களை நாம் மன்னிக்கலாமா? தேர்தல் வந்தால் வறுமை வறுமை என்று கூச்சலிடுகின்றனர். காங்கிரஸ் ‘கை’யின் உண்மை இதுதான். இதுதான் அவர்களது கொள்கை.

 

70 ஆண்டுகளாக காங்கிரஸினால் முடியாத வறுமை ஒழிப்பில் நாங்கள் உங்களுக்குக் கடன் பட்டிருக்கிறேன். நான் கூறுகிறேன், மத்திய அரசிடமிருந்து 100 காசுகள் அனுப்பப்பட்டால், 100 காசும் ஏழைகளைச் சென்றடையும்.

 

உங்களுக்கு வழங்கப்பட்ட பயன்களை வாரிச்சுருட்டிய 8 கோடி சுரண்டல்வாதிகளை பாஜக அடையாளம் கண்டு களைந்துள்ளது. 8 கோடி போலி சுரண்டல்வாதிகள் என்றால் ஒடிசாவின் மக்கள் தொகையை விட அதிகம். அவர்கள்தான் இந்தத் திட்டங்களின் மூலம் பயனடைந்துள்ளனர்.

 

காங்கிரஸ் ஆட்சியில் இடைத்தரகர்கள் பயனடைந்தனர், இதனால்தான் இந்த மாநிலத்திலிருந்து பலரும் தங்கள் வாழ்வாதாரத்திற்காக வெளி மாநிலம் செல்ல வேண்டிய துர்பாக்கிய நிலை ஏற்பட்டது.

 

இவ்வாறு பேசினார் பிரதமர் மோடி.

 

ஒடிசாவில் சட்டப்பேரவைத் தேர்தல்கள் லோக்சபா தேர்தல்களுடன் சேர்ந்து 4 கட்டங்களாக ஏப்ரல் 11, 18, 23 மற்றும் 29ம் தேதிகளில் நடைபெறுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x