

மணிப்பூர் மாநிலத்தில் ஒரே பிரசவத்தில் 5 குழந்தைகளை பெற்றெடுத்தார் ஒரு பெண். அவருக்கு ஏற்கெனவே 4 குழந்தைகள் உள்ளனர்.
மணிப்பூரின் விஷ்ணுபூர் மாவட் டத்தை சேர்ந்த மீனவரின் மனைவி வோய்னம் கீதா (35). நிறைமாத கர்ப்பிணியாக இருந்த அவர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இந்நிலையில் அவருக்கு நேற்று முன்தினம் பிரசவ வலி ஏற்பட்டது. பின்னர் 10 நிமிட இடைவெளியில் அவருக்கு தொடர்ந்து 5 குழந்தைகள் பிறந்தனர். இதில் 4 பெண், ஒரு ஆண் குழந்தை அடங்கும். இதில் ஒரு பெண் குழந்தை சிறிது நேரத்திலேயே இறந்து விட்டது. இதையடுத்து வட்டார மருத்துவ அறிவியல் கல்வி மருத்துவமனைக்கு தாயும், குழந்தை களும் மாற்றப்பட்டனர். 900, 800 கிராம் எடையுள்ள இரு பெண் குழந்தைகள் தீவிர சிகிச்சைப் பிரிவில் வைக்கப்பட்டுள்ளன. முதலில் பிறந்த பெண் குழந்தையும், மூன்றாவதாக பிறந்த ஆண் குழந்தையும் பிரச்சினை ஏதுமின்றி சீராக உள்ளன என்று டாக்டர்கள் தெரிவித்துள்ளன.
அப்பெண்ணுக்கு ஏற்கெனவே 4 குழந்தைகள் உள்ளன. இவர்கள் வெவ்வேறு பிரசவத்தில் தனித்தனி யாக பிறந்தவர்கள். இப்போது ஒரே நேரத்தில் வந்துள்ள புதிய வரவுகளையும் சேர்ந்து குடும்ப உறுப் பினர்களின் எண்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ளது.
மத்தியப் பிரதேசத்தில் 38 வயது அன்ஜுன் குஷ்வாகாவுக்கு கடந்த டிசம்பரில் ஒரே பிரசவத்தில் 10 குழந் தைகள் பிறந்ததே இந்தியாவில் ஒரே நேரத்தில் பிரசவத்தில் பிறந்த அதிக குழந்தைகளாகும். ஆனால் அதில் ஒரு குழந்தை கூட உயிர் பிழைக்கவில்லை.