இரவு முதல் சேவையை முழுதும் நிறுத்துகிறது ஜெட் ஏர்வேஸ்

இரவு முதல் சேவையை முழுதும் நிறுத்துகிறது ஜெட் ஏர்வேஸ்
Updated on
1 min read

இன்று இரவு அமிர்தசரஸ்-மும்பை விமானத்துடன் தற்காலிகமாக தனது அயல்நாட்டு, உள்நாட்டு விமான சேவைகளை ஜெட் ஏர்வேஸ் நிறுத்துவதாக அறிவித்துள்ளது.

கடனில் மூழ்கிய ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் படிப்படியாக சேவையை துண்டிக்க தொடங்கியது. பணியாளர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியாத நிலையில் தவித்த ஜெட் ஏர்வேஸ், வங்கிகளிடம் கடன் கோரியது.

ஜெட் ஏர்வேஸ் சில மாதங்களாக கேட்கப்பட்ட ரூ. 400 கோடி கடன் கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து ஜெட் ஏர்வேஸ் சர்வதேச மற்றும் உள்நாட்டு விமான சேவையை தற்காலிகமாக நிறுத்தியுள்ளது. மும்பையிலிருந்து அமிர்தசரஸ் செல்லும் விமான சேவைதான் கடைசியாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே 5 விமானங்களை மட்டுமே இயக்கி வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

“அவசரகால கடன் கிடைக்கவில்லை. ஆகவே எரிபொருள் உள்ளிட்ட செலவுகளை நிறுவனம் தாங்காது. இதன் காரணமாக ஜெட் ஏர்வேஸ் தனது சேவைகளை முற்றிலும் தற்காலிகமாக நிறுத்த முடிவெடுத்துள்ளது. கடைசி விமானம் இன்று பறக்கிறது”

அனைத்து சாத்தியங்களையும் பரிசீலித்த பிறகு இந்த வேதனையான முடிவை எடுத்துள்ளதாக  ஜெட் ஏர்வேஸ் நிர்வாகம் தெரிவித்தது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in