Last Updated : 04 Apr, 2019 01:17 PM

 

Published : 04 Apr 2019 01:17 PM
Last Updated : 04 Apr 2019 01:17 PM

காஷ்மீர் தேர்தல் தூதுவராக ‘மிஸ் இந்தியா’ போட்டியாளர் சானா துவா நியமனம்

மக்களவை தேர்தலில் காஷ்மீரில்  மிஸ் இந்தியா போட்டியாளர் சானா துவா தேர்தல் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

கடந்த 2017ல் பெமினா மிஸ் இந்தியா போட்டியில் கலந்துகொண்ட வந்த சானா துவா காஷ்மீருக்கான தேர்தல் தூதுவராக இந்திய தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது.

இவர் உலக அளவில் நடைபெற்ற மிஸ் யுனைடெட் காண்டினென்ட்ஸ் 2017 போட்டியிலும் கலந்துகொண்டு முதல் 10 பேர்களில் ஒருவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் ஒரு வழக்கறிஞருமாவார்.

இதுகுறித்து தலைமைத் தேர்தல் ஆணையர் சைலேந்திர குமார் பிடிஐயிடம் தெரிவித்ததாவது:

சனா துவா அழகிப் போட்டியில் மட்டும் பங்கேற்றவர் இல்லை, அவர் வழக்கறிஞராகவம் அதே நேரத்தில் சமூக ஆர்வலராகவும் செயல்பட்டுவருபவர்.

ஒரு பிரபலமானவர் என்ற முறையில் கல்வி, படைப்பாற்றல் விழிப்புணர்வு மற்றும் ஊக்குவிப்பு போன்ற துறைகளில் தன்னார்வ சேவைகளை அவர் மக்களுக்கு வழங்கி வருகிறார்.

இந்த பிரபலத் தன்மையைப் பயன்படுத்தி வரவிருக்கும் மக்களவைத் தேர்தலில், காஷ்மீரில் மக்கள் பெருமளவில் வாக்களிக்க முன்வருவதற்கான விழிப்புணர்வை

ஏற்படுத்தும் பணியை அவர் ஏற்க முன்வந்துள்ளார். அவரை காஷ்மீருக்கான தேர்தல் பிராண்ட் தூதுவராக ஆணையம் நியமித்துள்ளது.

இவ்வாறு தலைமை தேர்தல் ஆணையர் சைலேந்திர குமார் தெரிவித்தார்.

அழகுக் கலைகளில் பல்வேறு விருதுகளை உலகம் முழுவதிலிருந்து பெற்றுள்ள சனா துவா, ஜம்மு மற்றும் காஷ்மீரில் பெண் குழந்தை கல்வி மற்றும் "சேமி நீர்" பிரச்சாரத்தை ஊக்குவிப்பதில் தீவிரமாக ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

துவா ஒரு வீடியோ செய்தியில், ''பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்தியாவில் பல்வேறு பிராந்தியங்கள், மதங்கள், என்று வேறுபட்ட பின்னணிகளைக் கொண்டுள்ள மக்களாக நாம் இருக்கிறோம். என்றாலும் நாம் அனைவரும் எந்தவிதப் பாகுபாடும் இன்றி வாக்களிக்கும் உரிமையை பெற்றுள்ளதில் ஒன்றுபடுகிறோம். எனவே நமது வாக்குகளை செலுத்தி நமது உரிமையை நிலைநாட்டுவோம்'' என்று தேர்தல் விழிப்புணர்வு பிரச்சார வீடியோவில் பேசியுள்ளார்.

காஷ்மீர் எல்லைப் பகுதிகளில் தொடர்ந்து வெடிகுண்டு தாக்குதல்களும், துப்பாக்கிச் சண்டைகளும் தினம்தினம் நடந்துவருவதால் அங்கு தொடர்ந்து இயல்பு நிலை கேள்விக்குறியாகி வரும் நிலையில் மக்களை தேர்தலில் பங்கேற்க செய்வதில் தேர்தல் ஆணையம் முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x