Published : 06 Apr 2019 06:07 PM
Last Updated : 06 Apr 2019 06:07 PM

மோடி ஆட்சியில் வளர்ந்த பொருளாதாரம்; சரிந்த வேலைவாய்ப்பு- கருத்துக் கணிப்பில் தகவல்

மோடி ஆட்சியில் பொருளாதாரம் நன்றாக உள்ளதாகவும் அதே நேரத்தில் வேலைவாய்ப்பு வழங்கியதில் காங்கிரஸை விட பாஜக மோசம் என்றும் கருத்துக் கணிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

லோக்நிதி- 'தி இந்து' ஆங்கில நாளிதழ், திரங்கா தொலைக்காட்சி, சிஎஸ்டிஎஸ் ஆகியவை இணைந்து மார்ச் கடைசி வாரத்தில் தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்பை நடத்தின. இதற்காக இந்தியா முழுவதும் இருந்து 19 மாநிலங்களில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரிடம் கேள்விகள் கேட்கப்பட்டன. அந்தக் கருத்துக் கணிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

நாட்டின் பொருளாதார நிலை குறித்து ஆய்வு செய்தபோது 34% பேர் நன்றாக இருப்பதாகத் தெரிவித்துள்ளனர். 25% பேர் பொருளாதாரம் மோசமாக உள்ளதாகக் கூறியுள்ளனர். 33% பேர் நடுநிலை வகித்துள்ளனர்.

முன்னதாக ஜனவரி 2018-ல் எடுக்கப்பட்ட கருத்துக் கணிப்பில் 26% மக்களும் மே 2014-ம் ஆண்டு எடுக்கப்பட்ட ஆய்வில் வெறும் 19% மக்களும் பொருளாதார நிலை சிறப்பாக உள்ளதாகத் தெரிவித்திருந்தனர்.

நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமார்ச் 2019 (%)
மிக நன்று11
நன்று23
ஓரளவுக்கு உள்ளது33
மோசம்16
மிகவும் மோசம்9
கருத்து இல்லை8

 

எளிமையான வார்த்தைகளில் கூறவேண்டுமெனில் மோடி ஆட்சியில், இந்தியப் பொருளாதாரம் வளர்ந்துள்ளதாக நம்புபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

குறைந்த வேலைவாய்ப்பு

வேலைவாய்ப்பின்மை நாடு முழுவதும் முக்கியப் பிரச்சினையாக உள்ளது. ஆளும் பாஜக அரசில் வேலைவாய்ப்புகள் போதிய அளவில் உருவாக்கப்படவில்லை என்று குரல்கள் எழுந்துள்ளன. மோடி அரசில் கடந்த 5 ஆண்டுகளில் வேலைவாய்ப்புகள் அதிகரித்துள்ளதா, குறைந்துள்ளதா என்று கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு வேலைவாய்ப்பு குறைந்துவிட்டதாக 46% பேர் கூறியுள்ளனர். 25% பேர் அதிகரித்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

அதே நேரத்தில் மே 2014-ல் அடுக்கப்பட்ட ஆய்வில், 33% பேர் வேலைவாய்ப்பு குறைந்துவிட்டதாகவும் 19% பேர் அதிகரித்துள்ளதாகவும் கூறியிருந்தனர். அதாவது வேலைவாய்ப்புகளை உருவாக்கியதில், காங்கிரஸை விட பாஜக மோசமாகச் செயல்பட்டுள்ளது.

பாஜக கூட்டணியின் கீழ் வேலைவாய்ப்புமார்ச் 2019 (பாஜக) (%)மே 2014 (காங்கிரஸ்) (%)
அதிகரித்துள்ளது2519
குறைந்துள்ளது4633
மாற்றம் எதுவுமில்லை2134
பதில் இல்லை814

 

இளைஞர்கள் மற்றும் கல்லூரியை முடித்த வாக்காளர்களின் மனநிலையில், வேலை குறித்த கவலை அதிகமாக உள்ளது. கடந்த 3-4 வருடங்களில் தங்கள் பகுதிகளிலேயே வேலை கிடைப்பது மிகவும் கடினமாக மாறிவிட்டதாக 47% பேர் தெரிவித்துள்ளனர். 18 முதல் 35 வயது கொண்டவர்களில் 50% பேருக்குக் வேலை கிடைப்பது கடினமாக உள்ளது. கல்லூரி படித்தவர்களின் நிலை அதைவிட மோசமாக உள்ளது. 53% பேர் வேலைவாய்ப்பில் மோசமான அனுபவத்தைப் பெறுகின்றனர்.

இவ்வாறு கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x