Last Updated : 12 Apr, 2019 12:00 AM

 

Published : 12 Apr 2019 12:00 AM
Last Updated : 12 Apr 2019 12:00 AM

மோடியின் உள்நாட்டு பயண செலவுக்கான ஆவணம் இல்லை: பிரதமர் அலுவலகம் தகவல்

பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்ற பிறகு அவர் மேற்கொண்ட வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு பயணங்களுக்கான செலவு விவரங்களை தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் மும்பையை சேர்ந்த செயற்பாட்டாளர் அனில் கல்கரி கோரியிருந்தார். இதற்கு பிரதமர் அலுவலக பொதுத் தகவல் அதிகாரி (சிபிஐஓ) பிரவீன் குமார் பதில் அளித்துள்ளார்.

அவர் தனது பதிலில், “பிரதமரின் உள்நாட்டு பயணச் செலவுக்கான ஆவணங்கள் பராமரிக்கப்படுவதில்லை. இந்த செலவுகள் ஒரே துறையின் கீழ் வருவதில்லை. ஏனெனில் பிரதமரின் பயண ஏற்பாடுகளை பல்வேறு துறைகள் மேற்கொள்கின்றன. அவை செலவு செய்கின்றன. மேலும் தேர்தல் பிரச்சாரம் தொடர்பான பயணங்களுக்கு பிரதமர்அலுவலகம் எதுவும் செலவிடுவதில்லை. எனவே பிரதமரின் உள்நாட்டு பயணச் செலவு தொடர்பான விவரங்களை தர இயலவில்லை. மேலும் பிரதமரின் வெளிநாட்டுப் பயணங்கள் மற்றும் அவற்றுக்கான செலவு விவரங்களை பிரதமர் அலுவலக இணையதளத்தில் பெற்றுக்கொள்ளலாம்” என்று கூறியுள்ளார்.

பிரதமர் அலுவலக இணைய தளத்தில், பிரதமர் மோடி கடந்த 2014 மே முதல் 2019 பிப்ரவரி 22 வரை 49 முறை வெளிநாட்டுப் பயணம் மேற்கொண்டுள்ளார் எனகூறப்பட்டுள்ளது. மேலும் இவற்றுக்கான தனி விமானக் கட்டண செலவு பட்டியலிடப்பட்டு உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x