Last Updated : 21 Sep, 2014 02:03 PM

 

Published : 21 Sep 2014 02:03 PM
Last Updated : 21 Sep 2014 02:03 PM

119 தொகுதிகளை ஒதுக்க சிவசேனா முடிவு: பாஜக ஏற்க மறுப்பதால் கூட்டணியில் இழுபறி நீடிப்பு

பாஜகவுக்கு 119 தொகுதிகளும் இதர கூட்டணி கட்சிகளுக்கு 18 தொகுதிகளும் ஒதுக்கப்படும் என்று சிவசேனா அறிவித்துள்ளது. இதனை பாஜக ஏற்க மறுத்து விட்டது.

மகாராஷ்டிர சட்டசபைத் தேர்தல் அக்டோபர் 15-ம் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி சிவசேனா, பாஜக இடையே தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. மொத்த முள்ள 288 தொகுதிகளில் இரு கட்சிகளும் சரிசமமாகப் போட்டி யிடலாம் என்று பாஜக கூறிய யோசனையை சிவசேனா நிரா கரித்துவிட்டது.

இந்நிலையில் தொகுதிப் பங்கீடு தொடர்பான அறிவிப்பை சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே மும்பையில் நேற்று வெளியிட்டார்.

கட்சியின் உயர்நிலைக் குழு கூட்டத்தில் அவர் பேசிய தாவது:

இது தேர்தல் நேரம். இப்போது முழுநேர பிரச்சாரத்தில் ஈடுபடாமல் தொகுதிப் பங்கீடு தொடர்பாக நீண்ட பேச்சுவார்த்தை நடத்தி கொண்டிருப்பது மிகுந்த வருத்தம் அளிக்கிறது. கூட்டணியைக் காப் பாற்றும் நோக்கத்தில் 9 தொகுதி களை விட்டுக் கொடுக்க முன்வந் துள்ளோம். ஆரம்பத்தில் 160 தொகுதிகளை கோரினோம். இப்போது 151 தொகுதிகள் சிவசேனாவுக்கும் 119 தொகுதிகள் பாஜகவுக்கும் மீதமுள்ள 18 தொகுதிகள் ஆர்.பி.ஐ., சுவாபிமணி ஷெர்கரி சங்காத்னா, ராஷ்டிரிய சமாஜ் கட்சி, சிவ சங்ரம் சங்காத்னா ஆகிய கூட்டணி கட்சிகளுக்கும் ஒதுக்க முடிவு செய்துள்ளோம். இது மிகவும் நியாயமான தொகுதிப் பங்கீடு. இதற்கு மேல் இறங்கி வரமுடியாது. இதனை ஏற்பதும், ஏற்காததும் பாஜகவின் விருப்பம்.

மோடியை ஆதரித்தது பால் தாக்கரே மட்டுமே

குஜராத் கலவரத்தின்போது அன்றைய முதல்வர் நரேந்திர மோடியை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று கோரப்பட்டது. இதுதொடர்பாக சிவசேனா நிறுவனர் பால்தாக்கரேவை எல்.கே. அத்வானி தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆலோசனை கேட்டார். அப்போது மோடிக்கு ஆதரவாகக் குரல் கொடுத்தது பால் தாக்கரே மட்டும்தான்.

இந்துத்துவா கொள்கையின் அடிப்படையில் பாஜகவும் சிவசேனாவும் கைகோத்துள்ளன. இந்தக் கூட்டணி உடையக்கூடாது. ஆனால் அதை மீறி எது நடந்தாலும் அது விதி என்று ஏற்றுக் கொள்வோம் என்று உத்தவ் தாக்கரே தெரிவித்தார்.

பாஜக ஏற்க மறுப்பு

இதுகுறித்து மாநில பாஜக மூத்த தலைவர் எக்நாத் கட்சே கூறியபோது, சிவசேனாவின் தொகுதிப் பங்கீடு ஏற்புடையதாக இல்லை. பாஜகவின் வெற்றி வாய்ப்பு 65 சதவீதமாக உள்ளது, சிவசேனாவின் வெற்றி வாய்ப்பு 45 சதவீதம் மட்டுமே உள்ளது. இதனை அக்கட்சி புரிந்து கொள்ள வேண்டும் என்றார்.

பாஜகவின் மற்றொரு மூத்த தலைவர் வினோத் தவ்டே கூறிய தாவது: சிவசேனாவின் தொகுதிப் பங்கீட்டில் புதிதாக ஏதுவும் இல்லை, அவர்கள் நேருக்கு நேர் பேச்சுவார்த்தை நடத்துவதற்குப் பதிலாக ஊடகங்கள் மூலம் தொகுதிப் பங்கீட்டை அறிவித்து வருகின்றனர். கூட்டணி தொடர வேண்டும் என்றால் இப்போதைய தொகுதிப் பங்கீட்டை இறுதி அறிவிப்பாகக் கருதக்கூடாது. தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத் தப்பட்டு அனைவரும் ஏற்கும் தொகுதிப் பங்கீடு உடன்பாட்டை எட்ட வேண்டும் என்று தெரிவித்தார்.

பாஜக தரப்பில் 288 தொகுதி யிலும் போட்டியிடுவதற்கு ஏதுவாக வேட்பாளர் பட்டியல் தயார் நிலையில் வைக்கப்பட்டிருப்பதாக அந்தக் கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x