யாருக்கு நல்ல நாள்? - பிரதமர் மோடியை கிண்டல் செய்த அஜித் சிங்

யாருக்கு நல்ல நாள்? - பிரதமர் மோடியை கிண்டல் செய்த அஜித் சிங்

Published on

பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஐந்து ஆண்டுகளில் பதவியில் இருக்கும்போது என்ன செய்தார், இப்போது நல்ல நாள் வரும் என்று சொல்லிக்கொண்டிருக்கிறார் என்று ராஷ்டிரிய லோக் தளக் கட்சித் தலைவர் அஜித் சிங் கிண்டலாக பேசியுள்ளார்.

மக்களவைத் தேர்தலின் ஒருபகுதியாக, உத்தரப் பிரதேசத்தில் வரும் ஏப்ரல் 11ந் தேதி முதல்கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

இதை முன்னிட்டு  மெகா கூட்டணிக் கட்சிகளான, சமாஜ்வாதி கட்சி, பகுஜன் சமாஜ், ராஷ்டிரிய லோக் தளம் ஆகிய கட்சிகளின் முதல் கூட்டுப் பிரச்சார தேர்தல் கூட்டம் இன்று நடைபெற்றது.  அதில் கலந்துகொண்டு அஜீத் சிங் பேசியதாவது

''பாஜக 2014ல் ஆட்சி அதிகாரத்திற்கு வரமுடிந்தததற்கு காரணம் என்ன தெரியுமா? உத்தரப் பிரதேச மேற்குப் பகுதிகளில் நடந்த கலவரங்களுக்கு அவர்கள்தான் காரணம் என்றாலும் அக்கலவரங்கள் எல்லாம் அவர்கள் முன்னிலையில் நடக்கவில்லையென்பதுதான். ஆனால் இப்போது அப்படியில்லை; கடந்த ஐந்து ஆண்டுகளில் நடந்த கலவரங்கள் எல்லாம் அவர்கள் முன்னிலையில்தான் நடந்துள்ளது. எல்லாவற்றிலும் அவர்கள் இருந்தார்கள். எனவே அவர்கள் இந்தமுறை ஆட்சிக்குவருவது மிகவும் சிரமம்.

இன்னொன்று கேட்கிறேன், பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஐந்து ஆண்டுகளில் பதவியில் இருக்கும்போது என்ன செய்தார், இப்போது அவர் நல்ல நாள் வரும் என்று சொல்லிக்கொண்டிருக்கிறாரே, அப்படி அவர் நல்ல நாள் வரும், என்று சொல்லிக்கொள்வதெல்லாம் தனக்காகத்தானே தவிர உங்களுக்காக இல்லை. அதை முதலில் புரிந்துகொள்ளுங்கள்.

இவ்வாறு ராஷ்டிரிய லோக் தள் கட்சித் தலைவர் அஜித் சிங் பேசினார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in