தொன்மையான தமிழ் இனத்தின் மொழியும், கலாச்சாரமும் வாழ்வும் செழிக்கட்டும்: ராகுல் காந்தி வாழ்த்து

தொன்மையான தமிழ் இனத்தின் மொழியும், கலாச்சாரமும் வாழ்வும் செழிக்கட்டும்: ராகுல் காந்தி வாழ்த்து
Updated on
1 min read

தொன்மையான தமிழ் இனத்தின் மொழியும், கலாச்சாரமும் வாழ்வும், வரலாறும் செழிக்கட்டும் என்று ராகுல் காந்தி தமிழக மக்களுக்குப் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தமிழ்ப் புத்தாண்டு இன்று (ஞாயிற்ற்க்கிழமை) கொண்டாடப்படுகிறது. ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், முதல்வர் கே.பழனிசாமி, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, பாமக நிறுவனர் ராமதாஸ் ஆகிய தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது புத்தாண்டு வாழ்த்தை தமிழக மக்களுக்கு தெரிவித்துள்ளார்.

இது குறித்து ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில், ''தமிழ் சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் இனிய தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்! தொன்மையான தமிழ் இனத்தின் மொழியும், கலாச்சாரமும் வாழ்வும் வரலாறும் செழிக்கட்டும்'' என்று தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in