காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் பிரியங்கா சதுர்வேதி ராஜினாமா

காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் பிரியங்கா சதுர்வேதி ராஜினாமா
Updated on
1 min read

காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளரும் கட்சியின் ஊடக ஒருங்கிணைப்பாளருமான பிரியங்கா சதுர்வேதி கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் பிரியங்கா சதுர்வேதி காங்கிரஸ் கட்சியுடனான தனது அனைத்து பதவிகளையும் விட்டு விலகுவதாக அறிவித்துள்ளார். இதற்கான ராஜினாமா கடிதத்தை கட்சி தலைமைக்கு அனுப்பினார்.

முன்னதாக ட்விட்டர் கணக்கில் உள்ள தனது கட்சி சார்ந்த அறிமுகங்களையும் அவர் மாற்றிக்கொண்டார். விலகுவதற்கு முன் தான் கட்சியில் இருந்த பதவிகள் குறித்த விவரங்களையும் அதில் வெளியிட்டிருந்தார்.

உத்தரப் பிரதேசத்தில் மாற்றப்பட்ட சில கட்சி நிர்வாகிகள் சில தினங்களுக்கு முன், மதுராவில் நடைபெற்ற ஒரு செய்தியாளர் கூட்டமொன்றில் தன்னிடம் தவறாக நடந்துகொண்டதையும் தனது வருத்தத்தை அவர் குறிப்பிட்டுள்ளார்.

உபியில் இடை நீக்கம் செய்ப்பட்ட சில காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் ஏப்ரல் 15 அன்று மீண்டும் கட்சிக்குள் சேர்த்துக்கொள்ளப்பட்டனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in