Last Updated : 14 Apr, 2019 02:34 PM

 

Published : 14 Apr 2019 02:34 PM
Last Updated : 14 Apr 2019 02:34 PM

சபரிமலையில் பதற்றம் உருவானதற்கு மோடிக்கும் பங்கு உண்டு: கேரள முதல்வர் பினராயி விஜயன் குற்றச்சாட்டு

சபரிமலை குறித்து ஆதாரமற்ற விஷயங்களைப் பேசும் பிரதமர் மோடி ஒரு பொய்யர், சபரிமலையில் அமைதியற்ற சூழல், பதற்றம் ஏற்பட மோடிக்கும் பங்கு உண்டு என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் குற்றச்சாட்டு கூறியுள்ளார்.

கேரள மாநிலத்தில் சபரிமலை ஐயப்பன் கோயில் குறித்துப் பேசினாலே முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான அரசு வேட்பாளர்களைக் கைது செய்கிறது என்று தமிழகத்திலும், கர்நாடகத்திலும் நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் பிரதமர் மோடி குற்றச்சாட்டு வைத்தார்.

கேரள முதல்வர் பினராயி விஜயன், கொல்லத்தில் இன்று தேர்தல் பிரச்சாரம் செய்தார், அப்போது, இந்த குற்றச்சாட்டுக்கு விளக்கம் அளித்தார். அவர் கூறியதாவது:

கேரள மாநிலத்தில் தேர்தல் பிரச்சாரத்தின் போது சபரிமலை ஐயப்பன் கோயில் குறித்து யாரேனும் பேசினால் கேரள அரசு கைது செய்கிறது என்று பிரதமர் மோடி பொய்யான குற்றச்சாட்டு கூறுகிறார். இது அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டு,மிகப்பெரிய பொய்.

சபரிமலை விஷயத்தில் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுக்கு கட்டுப்பட்டுத்தான் நாங்கள் நடவடிக்கை எடுத்தோம். உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுகளை மீறியவர்கள் மீது  நடவடிக்கை எடுத்து கைது செய்தோம். பிரதமராக இருக்கும் மோடியும், உச்ச நீதிமன்றம் என்ன கூறியதோ அதற்கு கட்டுப்பட்டுத்தான் நடக்க வேண்டும்.

நாட்டின் ஜனநாயக கொள்கைகளை பாதுகாக்கும் பொருட்டு, நாம் அனைவரும் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு, உத்தரவுக்கு கட்டுப்பட வேண்டும். அதைத்தான் அனைவரும் செய்திருக்கிறோம். ஆனால், சங்பரிவாரங்கள் என்ன செய்தன, கிரிமினல்களை சபரிமலைக்கு அனுப்பி இடையூறு செய்தன.சபரிமலையில் பதற்றம் உருவானதற்கும், அமைதியற்ற சூழல் ஏற்பட்டதற்கும் மோடிக்கும் பங்கு இருக்கிறது.

இவ்வாறு பினராயி விஜயன் பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x