Published : 24 Sep 2014 01:29 PM
Last Updated : 24 Sep 2014 01:29 PM

பிரதமர் மோடியின் நவராத்திரி விரத மெனு: அமெரிக்காவுக்கு இந்திய அதிகாரிகள் அறிவுரை

செப்டம்பர் 29- ஆம் தேதி அதிபர் ஒபாமா ஏற்பாடு செய்திருக்கும் இரவு உணவு உபசரிப்பில், மோடியின் விரதத்தை கருத்தில் கொண்டு மோடிக்கு வெறும் எலுமிச்சை சாறு கலந்த நீரும் தேநீரும் வழங்க ஏற்பாடு செய்யும்படியும் அமெரிக்க அதிகாரிகளுக்கு இந்திய வெளியுறவு அமைச்சகம் கேட்டுக்கொண்டுள்ளது.

செப்டம்பர் 26-ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்கா செல்கிறார். நியூயார்க்கில் உள்ள அமெரிக்க-வாழ் இந்தியர்களுக்காக அவர் உரையாற்ற உள்ளார்.

மேலும் பயணத்தின் ஒரு பகுதியாக வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையில் இருநாட்டு வெளியுறவு கொள்கைகள் குறித்து அதிபர் ஒபாமாவுடன் அவர் கலந்தாலோசிக்க உள்ளார். மோடியின் வருகைக்காக ஏற்பாடுகளை அமெரிக்க வெளியுறவுத் துறை செய்து வருகிறது.

இந்த நிலையில் செப்டம்பர் 25 முதல் அக்டோபர் 5-ஆம் தேதி வரை நவராத்திர விழா நடைபெறுவதால், பிரதமர் நரேந்திர மோடி தனது பயணத்தின்போது விரதத்தில் இருப்பார். இதனால் அந்த தினங்களில் அவரது உணவு கட்டுப்பாடுகள் குறித்து இந்திய வெளியிறவுத் துறை சார்பில் அமெரிக்க அதிகாரிகளுக்கு சில பரிந்துரைகள் வழங்கப்பட்டுள்ளன.

பிரதமர் மோடி, நவராத்திர விரதம் மேற்கொள்ளும் வேளையில் அவரது அமெரிக்கப் பயணம் அமைந்துள்ளதால், அவரது உணவுக் கட்டுப்பாடு குறித்து அமெரிக்க அதிகாரிகளுக்கு தெளிவாக எடுத்துரைக்கப்பட்டுள்ளதோடு அவற்றை பின்பற்றுமாறும் அறிவுறை வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி, செப்டம்பர் 29- ஆம் தேதி அதிபர் ஒபாமா ஏற்பாடு செய்திருக்கும் இரவு உணவு உபசரிப்பில், மோடியின் விரதத்தை கருத்தில் கொண்டு மோடிக்கு வெறும் எலுமிச்சை சாறு கலந்த நீரும் தேநீரும் வழங்க ஏற்பாடு செய்யும்படியும் கேட்டுக்கொள்ளப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x