

கிரிக்கெட் வீரர் ரவிந்திர ஜடேஜாவின் மனைவி பாஜகவில் கடந்த மாதம் இணைந்த நிலையில், அவரின் தந்தை, சகோதரி இன்று காங்கிரஸ் கட்சியில், பட்டிதார் இனத் தலைவர் ஹர்திக் படேல் முன்னிலையில் இணைந்தனர்.
இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டரும், சிஎஸ்கே அணி வீரருமான ரவிந்திர ஜடேஜாவின் மனைவி ரிவாபா, கடந்த மாதம் 3-ம் தேதி ஜாம்நகரில் பாஜக எம்.பி. பூனம்பென் மாடம் முன்னிலையில் இணைந்தார்.
இந்நிலையில், ஜாம்நகர் மாவட்டம், கலாவட் நகரில் இன்று காங்கிரஸ் கட்சியின் பேரணி நடந்தது. அப்போது, ரவிந்தி ஜடேஜாவின் தந்தை அனிருதுசிங், சகோதரி நைனாபா ஆகியோர் காங்கிரஸ் கட்சியில் பட்டிதார் சமூகத்தின் தலைவர் ஹர்திக் படேல் முன்னிலையில் சேர்ந்தனர். அப்போது, ஜாம்நகர் மக்களவை வேட்பாளர் முலு கண்டோரியாவும் உடன் இருந்தார்.
குஜராத்தில் உள்ள 26 மக்களவைத் தொகுதிகளுக்கும் 3-வது கட்டமாக வரும் 23-ம் தேதி நடக்கிறது குறிப்பிடத்தக்கது.