

தெலங்கானா மாநிலத்தின் பாரம்பரிய திருவிழாவான ‘பதுகம்மா பண்டிகை’ ஆண்டு தோறும் செப்டம்பர்-அக்டோபர் மாதங்களில் வெகு விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம்.
இத்திருவிழா கவுரி விரதத்தை போன்று, தசரா சமயத்தில் தொடர்ந்து 9 நாட்கள் கொண்டாடப்படுகிறது. இதில் பெண்கள் ஆர்வத்துடன் கலந்து கொள்வது மரபு.
இத்திருவிழாவில் கலந்து கொள்ளும்படி, தமிழக முதல்வர் ஜெயலலிதா உட்பட ராஜஸ்தான், குஜராத், மேற்கு வங்க முதல்வர்களுக்கும், மத்திய அரசில் பெண் அமைச்சர்கள் அனைவருக்கும், தெலங்கானா முதல்வர் கே. சந்திரசேகர ராவ் நேற்று அழைப்பு விடுத்தார்.