

நக்ஸலைட்கள் ஆயுதங்களை கைவிட்டால் அவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்த மத்திய அரசு தயாராக உள்ளது என உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறினார்.
உள்துறை அமைச்சகத்தின் 100 நாள் பணிகள் குறித்து ராஜ்நாத் சிங் டெல்லியில் வெள்ளிக்கிழமை செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது அவர் கூறும்போது, “கடந்த 100 நாட்களில் 132 நக்ஸ லைட்கள் சரணடைந்துள்ளனர். இது கடந்த ஆண்டு இதே காலகட் டத்தில் சரணடைந்தவர்கள் எண் ணிக்கையை விட 3 மடங்கு அதிகம். நக்ஸல் பாதிப்புள்ள பகுதி களில் தகவல் தொடர்பு வசதியை மேம்படுத்தும் வகையில், 2,199 செல்போன் கோபுரங்கள் அமைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித் துள்ளது.
வன்முறை பாதையில் இருந்து விலகினால் மட்டுமே இடதுசாரி தீவிரவாதிகளுடன் பேச்சு நடத்த முடியும். வன்முறையை கைவிடும் யாருடனும் பேச்சு நடத்த நாங்கள் தாயார்.
காஷ்மீரிலிருந்து புலம்பெயர்ந் தோர் மீண்டும் அங்கு திரும்புவதற்கு நடவடிக்கை எடுப்பது உள்பட பாஜக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டிருந்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில், கடந்த 100 நாட்களில் எனது அமைச்சகம் கவனம் செலுத்தியது. சொல்வது ஒன்று, செய்வது வேறொன்றாக இருக்காது என்பதை நாங்கள் உறுதி செய்துள்ளோம்.
காஷ்மீரிலிருந்து புலம்பெயர்ந் தோர் மறுவாழ்வுக்காக ரூ.500 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. காஷ்மீர் திரும்புவதில் அவர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில், தொடர்புடைய அனைத்து தரப் பினருடன் பேசி வருகிறோம்.
காஷ்மீரிலிருந்து புலம்பெயர்ந்த வர்கள் பண்டிட்டுகள் மட்டுமல்ல. 1989-ல் தீவிரவாதம் தலைதூக்கிய பிறகு காஷ்மீரை விட்டு வெளி யேறிய சீக்கியர்கள் மற்றும் இதர பிரிவினரும் இதில் அடங்குவர்.
குஜராத்தில் கடலோர காவல் படை பயிற்சி மையம் அமைக்கப் படும். இதற்கு விரைவாக நிலம் கையகப்படுத்தி தருமாறு மாநில அரசை கேட்டுள்ளோம். காவல் துறையில் சப் இன்ஸ்பெக்டர் பதவி வரை பெண்களுக்கு 33 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்குமாறு மாநில அரசு களை கேட்டுக்கொண்டுள்ளோம்.
ஆளுநரின் தனிப்பட்ட உரிமை
டெல்லியில் புதிய அரசு அமைப் பது தொடர்பாக துணைநிலை ஆளுநருக்கு உள்துறை அமைச்ச கம் என்ன பரிந்துரை அளித்துள்ளது என்று கேட்கிறீர்கள்.
இது தொடர்பாக நானோ எனது அமைச்சகமோ எந்த பரிந்துரையும் அளிக்கவில்லை. யாரை ஆட்சியமைக்க அழைக்க லாம் என்பது துணைநிலை ஆளுநரின் தனிப்பட்ட உரிமை. எங்கள் பரிந்துரையை அவர் கோரவில்லை. இந்த விஷயத்தில் அவரே முடிவு எடுப்பார். இவ்வாறு ராஜ்நாத் சிங் கூறினார்.