

சீன அதிபருக்கு எதிர்ப்பு தெரிவித்து, அவர் தங்கியிருக்கும் டெல்லி தாஜ் பேலஸ் ஹோட்டல் முன் திரண்ட திபெத்தியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
'சுதந்திரம் எங்கள் பிறப்புரிமை', 'திபெத் விடுதலை இந்தியாவுக்கு பாதுகாப்பு' என போராட்டக்காரர்கள் கோஷம் எழுப்பினர்.
போராட்டத்தில் ஈடுபட்டிருந்த சிலர், ஹோட்டல் வளாகத்திற்குள் நுழைய முயன்றனர். அப்போது அவர்களை தடுத்து நிறுத்தி போலீஸார் கைது செய்தனர்.
வியாழக்கிழமை, பிரதமர் மோடி - சீன அதிபர் பேச்சுவார்த்தை நடந்த டெல்லி ஹைதராபாத் இல்லத்திற்கு முன்னர் திரண்ட திபெத்தியர்கள் போராட்டம் நடத்தினர்.